உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான்

By செய்திப்பிரிவு

2019-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட ஆப்கானிஸ்தான் அணி தகுதி பெற்றது.

2019-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் உள்ள ஹராரே நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற கடைசி சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து மோதின. முதலில் பேட் செய்த அயர்லாந்து 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. ஸ்டிர்லிங் 55, கெவின் ஓ’பிரைன் 41, நியால் ஓ’பிரைன் 36 ரன்கள் சேர்த்தனர். ரஷித்கான் 3 விக்கெட்கள் கைப்பற்றினார்.

210 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 49.1 ஓவரில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. முகம்மது ஷஹ்சாத் 54, குல்பாதின் நயிப் 45, அஸ்கார் ஸ்டானிக்ஸாய் 39 ரன்கள் சேர்த்தனர். 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் விளையாட தகுதி பெற்றது. மேலும் தகுதி சுற்றின் இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது ஆப்கானிஸ்தான். நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் அந்த அணி மேற்கிந்தியத் தீவுகளை சந்திக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

53 mins ago

இந்தியா

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

11 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

சுற்றுலா

4 hours ago

கல்வி

3 hours ago

மேலும்