ஆடவர் வில்வித்தையில் இந்தியாவுக்கு வெள்ளி உறுதியானது

By செய்திப்பிரிவு

இன்சியானில் நடைபெறும் ஆசிய விளையாட்டு, ஆடவர் வில்வித்தைப் போட்டியில் அபிஷேக் வர்மா, ரஜத் சவுகான், சந்தீப் குமார் ஆகிய வீரர்கள் கொண்ட இந்திய அணி இறுதிக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் இப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் உறுதியானது.

வர்மா, சவுகான், குமார் ஆகியோர் கொண்ட இந்திய வில்வித்தை அணி ஈரானை 231-227 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று இறுத்க்குள் நுழைந்துள்ளனர்.

இதனையடுத்து இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த கொரியாவை இந்திய அணியினர் சந்திக்க நேரிட்டுள்ளது. கொரியா, பிலிப்பைன்ஸ் அணியை 228-227 என்று போராடி வீழ்த்தியது.

மாறாக வில்வித்தை மகளிர் பிரிவில் இந்திய மூவர் கூட்டணியான, திரிஷா தேவ், பர்வச ஷிண்டே, ஜோதி சுரேகா ஆகியோர் அரையிறுதியில் பலமான சைனீஸ் தைபே அணியினரிடத்தில் 224-226 என்ற புள்ளிகள் கணக்கில் கடைசி வரை போராடி தோல்வி தழுவினர்.

நாளை (வெள்ளிக்கிழமை) ஈரானுடன் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் இந்திய மகளிர் அணி மோதுகிறது.

ஈரான் மகளிர் அணியும் கொரியாவிடம் 222-229 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வி தழுவியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வேலை வாய்ப்பு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்