பாக். பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், தேர்வுக்குழு தலைவர் இன்சமாம் உல் ஹக் பதவிகள் முடிவுக்கு வருகின்றன

By பிடிஐ

உலகக்கோப்பை போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளன, இந்தப் போட்டிகள் ஜூலை மாதம் மத்தியில் முடிவுக்கு வருகிறது, அத்துடன் பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், அணித்தேர்வுக்குழு தலைவர் இன்சமாம் உல் ஹக் ஆகியோரது பதவிகளும் முடிவுக்கு வருகிறது.

 

இருவரது ஒப்பந்தங்களும் உலகக்கோப்பையுடன் முடிவுக்கு வருகிறது. இதில் இன்சமாம் உல் ஹக் இடத்திற்கு முன்னாள் அதிரடி தொடக்க வீரர் ஆமிர் சொஹைல் வருகிறார்.

 

ஆமிர் சொஹைல் ஏற்கெனவே 2002-04-ம் ஆண்டுகளில் தலைமை அணித் தேர்வாளராக செயல்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாக இயக்குநர் வாசிம் கான், அணி உலகக்கோப்பையில் எப்படி ஆடினாலும் சரி இந்த மாற்றங்கள் உறுதி என்று தெரிவித்தார்.

 

மிக்கி ஆர்தர்,  இன்சமாம் உல் ஹக் எடுத்த சில முடிவுகள் மீது பாகிஸ்தன கிரிக்கெட் வாரியம் அதிருப்தி கொண்டிருப்பதால் ஒப்பந்தங்களை நீட்டிக்க இயலாது என்று பாகிஸ்தன கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

ஆனால், “இன்சமாம் உல் ஹக்கை தலைமைப் பயிற்சியாளராக உலகக்கோப்பைக்குப் பிறகு நியமிக்க சிலர் லாபி செய்து வருகின்றனர்” என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்