ஆடவர் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக பெண் களநடுவர்: வரலாறு படைக்கிறார் கிளைர் போலோசக்

By பிடிஐ

ஆடவர் ஒருநாள் சர்வதேச போட்டியில் முதல் முறையாக களநடுவராக கிளைர் போலோசக் என்ற ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் நடுவர் பணியாற்றி வரலாறு படைத்துள்ளார்.

 

சனிக்கிழமை நடைபெறும் ஐசிசி உலக கிரிக்கெட் லீக் டிவிஷன் 2 ஒருநாள் போட்டித் தொடர் இறுதிப் போட்டியில் போலோசக் நடுவராகப் பணியாற்றி வரலாறு படைக்கிறார்.

 

31 வயது ஆஸ்திரேலியரான கிளைர் போலோசக் இதற்கு முன்பாக மகளிர் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 15 போட்டிகளில் நடுவராகப் பணியாற்றியுள்ளார். முதலில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மகளிர் ஒருநாள் சர்வதேச போட்டியில் 2016-ல் நடுவராகக் களமிறங்கினார் போலோசக்.

 

இவர் முன்னதாகவே ஆஸ்திரேலிய ஆடவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் 2017-ல் லிஸ்ட் ஏ போட்டியில் நடுவராகப் பணியாற்றி பெண் நடுவர் திலகமாகத் திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

 

கடந்த டிசம்பரில் இவரும் தெற்கு ஆஸ்திரேலிய பெண் நடுவரான எலாய்சே ஷெரிடன் இருவரும் சேர்ந்து அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ்-மெல்போர்ன் ஸ்டார்ஸ் ஆடவர் உள்நாட்டு டி20 தொடரில் நடுவர் பணியாற்றினர்.

 

பெண்கள் ஏன் நடுவராக இருக்க முடியாது, தடைகளை உடைக்க வேண்டிய தேவை உள்ளது என்கிறார் பூரிப்புடன் காணப்படும் கிளைர் போலோசக்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

8 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்