சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு; தமிழக அரசு உதவி செய்தால் ஒலிம்பிக்கில் வெற்றி பெறுவேன்: ஆசிய போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து நம்பிக்கை

By செய்திப்பிரிவு

தமிழக அரசு உதவி செய்தால் ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெறுவேன் என்று ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்று சென்னை திரும்பிய கோமதி மாரிமுத்து தெரிவித்து உள்ளார்.

கத்தார் நாட்டின் தலைநக ரான தோகாவில் 23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து, தங்கம் வென்று சாதனை படைத்தார். இவர் திருச்சி மாவட்டத் தில் உள்ள பின்தங்கிய கிராமமான முடிகண்டத்தைச் சேர்ந்தவர்.

கோமதியின் தந்தை மாரி முத்து, ஒரு பண்ணையில் கூலித் தொழிலாளியாக இருந் தவர். கோமதிக்கு ஓட்டப் பந்தயத்தில் ஆர்வம் இருப் பதை அறிந்து சிறுவயது முதலே அவருக்கு பயிற்சி அளித்துள்ளார். ஏழ்மையான நிலையிலும் தன் மகளின் விளையாட்டு ஆர்வத்தை அவர் ஊக்கப்படுத்தியுள்ளார். இதன் காரணமாக கடந்த 2013-ம் ஆண்டுமுதல் பல் வேறு சர்வதேச விளையாட் டுப் போட்டிகளில் கோமதி பங்கேற்று வந்தார்.

இந்நிலையில் மாரிமுத்து சில ஆண்டுகளுக்கு முன் காலமானார். அவரைத் தொடர்ந்து கோமதிக்கு சிறு வயது முதல் பயிற்சி யளித்து வந்த பயிற்சியாளரும் காலமானார்.

அடுத்தடுத்து தனக்கு ஏற்பட்ட இரு இழப்பு களையும் சமாளித்து முன்னே றிய கோமதி, தற்போது ஆசிய தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று தாயகம் திரும்பிய கோமதி மாரிமுத்துவுக்கு சென்னை விமான நிலையத்தில் ரசிகர் கள் உற்சாக வரவேற்பு அளித் தனர். அப்போது செய்தி யாளர்களிடம் அவர் கூறிய தாவது:

ஆசிய தடகள சாம்பியன் ஷிப் போட்டியில் தங்கம் வென்றது மகிழ்ச்சியாக உள் ளது. நீங்கள் எனக்கு கொடுக் கும் ஆதரவைப் பார்க்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது. நான் பெங்களூருவில் வருமானவரித் துறையில் பணியாற்றுகிறேன். எனக்கு பெங்களூருவில் இருப்பதில் பெரிய அளவில் விருப்பம் இல்லை. அதனால் தமிழகத் தில் வேலைக்கு முயற்சி செய் தேன். ஆனால் இங்கு எனக்கு வேலை கிடைக்கவில்லை. அதனால்தான் பெங்களூரூ வில் பணியாற்றுகிறேன். தமிழ கத்தில் வேலையில் இருந்து தங்கம் வென்றிருந்தால் எனக்கு இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

என்னைப் போன்றவர் களுக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும். என் னிடம் அரசு அதிகாரிகள் பேசி னார்கள். முதல்வர் பழனி சாமி வாழ்த்து தெரிவித்தார். நான் மிகவும் கஷ்டப்பட்டு இந்த அளவுக்கு வந்திருக் கிறேன். என்னைப் போல் கஷ்டப்பட்டு வரும் திறமை யுள்ளவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும். எனது கிராமத்தில் பேருந்து வசதி இல்லை. சாலையும் சரியாக இருக்காது. மின்விளக்கு வசதி யும் இல்லை. என்னைப் போல் பேருந்து வசதி இல்லாத கிராமங்களில் இருந்து நிறைய பேர் வருகிறார்கள். அவர் களுக்கு பேருந்து வசதி செய்துகொடுத்தால் நன்றாக இருக்கும்.

எனது தந்தைதான் என்னை பயிற்சிக்கு அழைத்துச் செல் வார். அவரும் எனது பயிற்சி யாளரும் இறந்த பிறகும் என்ன செய்வதென்று தெரிய வில்லை. அதன்பின் பலரின் உதவியால் நான் பயிற்சி எடுத்தேன். நான் கடினமாக உழைத்ததற்கு இப்போது வெற்றி கிடைத்துள்ளது. எனக்கு தமிழக அரசு உதவி செய்தால் நான் ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெறு வேன்.

இவ்வாறு கோமதி மாரி முத்து தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

46 secs ago

சினிமா

18 mins ago

தமிழகம்

36 mins ago

க்ரைம்

43 mins ago

வணிகம்

47 mins ago

சினிமா

44 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

உலகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்