பெரிய ஷாட்களை ஆட விஜய் சங்கர் ஒன்றும் ரிஷப் பந்த் அல்ல: சஞ்சய் மஞ்சுரேக்கர் விளாசல்

By பிடிஐ

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்ததையடுத்து அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத கேப்டன் விராட் கோலி மீது விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் இந்திய பேட்டிங் வரிசை எப்படி இருக்க வேண்டும், கோலியை 4ம் நிலையில் இறக்கும் முடிவு சரியா என்பது பற்றி முன்னாள் வீரர்கள், வர்ணனையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

மொத்தமாக உலகக்கோப்பைக்கான அணி இப்போதைய நிலையில் சரியானதுதானா என்ற அடிப்படையில் கேள்வி எழுப்பப்பட விராட் கோலி டவுன் ஆர்டர் பற்றி பதில் கூற மறுத்த சஞ்சய் மஞ்சுரேக்கர் தன் ட்விட்டர் பக்கத்தில்,

 

“முடிவில் யாரைத் தேர்ந்தெடுத்தாலும் இந்திய மிடில் ஆர்டர் வரிசை 2019 உலகக்கோப்பையில் பிரச்சினைகள் உள்ளதுதான். கடைசி போட்டியில் ரிஷப் பந்த், விஜய் சங்கர் ஆடியது உள்ளபடியே கடும் ஏமாற்றம் அளிக்கிறது.

 

தங்கள் திறமையை நிரூபிக்க இதைவிட பெரிய வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்திருக்க முடியாது. விஜய் சங்கரிடம் பெரிய ஷாட்கள் கைவசம் இருக்கலாம், ஆனால் அவர் ஒன்றும் ரிஷப் பந்த் அல்ல. தரையோடு தரையாக ஆடி ஸ்கோரிங் ரேட்டையும் நல்ல நிலையில் வைத்திருக்க கற்றுக் கொள்ள வேண்டும். அதாவது இந்திய கேப்டன் (விராட் கோலி) ஆடுவது போல் ஆடக் கற்றுக் கொள்ள வேண்டும்” என்று கடுமையாகக் கூறினார்.

 

இன்னொரு ட்வீட்டில் சஞ்சய் மஞ்சுரேக்கர், “ஆஸ்திரேலியாவுக்காக மகிழ்கிறேன். தனித்துவமான தொடர் வெற்றி. அவர்கள் நாடு பெருமை கொள்ளும். இதைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள். அதாவது வெற்றி அணி அதுவே மிகவும் பிடித்த அணி” என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

40 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்