டாஸ் வென்றார் கோலி: இந்திய அணியில் 4 மாற்றங்கள்

By செய்திப்பிரிவு

மொஹாலியில் இன்று நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று,  பேட் செய்ய தீர்மானித்துள்ளார்.

இந்தியா  வந்துள்ள ஆஸ்திரேலிய அணி டி20, ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரைக் கைப்பற்றியுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-2 என்ற கணக்கில் இருக்கிறது. இந்திய அணி 2 வெற்றிகளுடன் முன்னிலையில் இருக்கிறு. இந்த ஆட்டத்தில் பெறும் வெற்றி தொடரைக் கைப்பற்ற உதவும் என்பதால், இந்த போட்டி முக்கியத்துவமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார். இந்திய அணி சார்பில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தோனிக்கு பதிலாக ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளார். ஷமிக்கு பதிலாக புவனேஷ்வர் குமார், ரவிந்திர ஜடேஜாவுக்கு பதிலாக யஜூவேந்திர சாஹலும், அம்பதி ராயுடுவுக்கு பதிலாக கே.எல்.ராகுலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மொஹாலி ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமானது என்பதால், முதலில் பேட்டிங் செய்யும் அணி நிர்ணயிக்கும் இலக்கை சேஸிங் செய்யும் அணி எட்ட முடியும்.ஆஸ்திரேலிய அணியில் ஸ்டோனிஸ், லயானுக்கு பதிலாக, பெஹரன்டார்ப், டர்னர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணி விவரம்:

ஷிகர் தவண், ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், கேதார் ஜாதவ், விஜய் சங்கர், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், யஜூவேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா

ஆஸி.அணி விவரம்:

ஆரோன்  பிஞ்ச், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ் கம்ப், களென் மேக்ஸ்வெல், ஆஸ்டன் டர்னர், அலெக்ஸ் காரே, ரிச்சார்ட்ஸன், பாட் கம்மின்ஸ், பெஹரன்டார்ப், ஆடம் ஜம்பா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

14 mins ago

தமிழகம்

8 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

44 mins ago

இந்தியா

38 mins ago

தமிழகம்

55 mins ago

வாழ்வியல்

46 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்