கெயில் காட்டடி, மின்னல் வேக அரை சதம்: தாமஸ் வேகத்தில் இங்கி. சுருண்டது:  மே.இ.தீவுகள் எளிதான வெற்றி

By செய்திப்பிரிவு

கெயிலின் காட்டடி பேட்டிங், தாமஸின் மிரட்டல் பந்துவீச்சு ஆகியவற்றால் இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மே.இ.தீவுகள் அணி.

காட்டடி அடித்த கெயில் 17 பந்துகளில் அரை சதத்தையும், 27 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். வேகப்பந்துவீச்சாளர் ஆஷ்லே தாமஸ் 5.1 ஓவர்கள் வீசி 21 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது அவரின் ஒருநாள் அரங்கில் சிறந்த பந்துவீச்சாக அமைந்தது.

5 விக்கெட் வீழ்த்திய தாமஸ் ஆட்ட நாயகனாகவும், இந்தத் தொடரில் 400 ரன்களுக்கும் மேல் குவித்த கெயில் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-2 என்ற கணக்கில் தொடரை இங்கிலாந்தும், மேற்கிந்தியத் தீவுகளும் சமன் செய்தன. கிரனாடாவில் 3-வது போட்டி மழையால் கைவிடப்பட்டது.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 28.1 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 114 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 227 பந்துகள் மீதமிருக்கையில், 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடந்த 4-வது போட்டியில் இங்கிலாந்து அணி 418 ரன்கள் எனும் மிகப்பெரிய இலக்கை வைத்த நிலையில், இந்த  ஆட்டத்தில் 113 ரன்களில் சுருண்டது. இது மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி அடித்த குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும்.

டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் ஃபீல்டிங் செய்தது. இதையடுத்து, இங்கிலாந்து அணி களமிறங்கியது. இங்கிலாந்து பேட்ஸ்மேன்களில் ஹேல்ஸ், பட்லர் ஆகியோர் சேர்த்த 23 ரன்களே அதிகபட்சமாகும். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

18.5 ஓவர்களில் 111 ரன்களுக்கு 6-வது விக்கெட்டை இழந்த இங்கிலாந்து அணி, அடுத்த 2 ரன்களைச் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.

25-வது ஓவரில் 6-வது விக்கெட்டை இழந்த இங்கிலாந்து அணி அடுத்த 2 ஓவர்களில் மீதமிருந்த அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி தரப்பில் தாமஸ் 5 விக்கெட்டுகளையும், பிராத்வெய்ட், ஹோல்டர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

114 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் மேற்கிந்தியத் தீவுகள் அணி களமிறங்கியது. தொடக்கத்தில் இருந்த காட்டடியில் கெயில் இறங்கினார். இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் கிறிஸ் வோக்ஸ், மார்க் உட் ஆகியோரின் பந்துவீச்சை பொளந்து கட்டினார் கெயில். பந்துகளை சிக்ஸர்களுக்கும், பவுண்டரிகளுக்கும் விளாசினார்.

தொடக்க வீரர் கேம்பெல் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு 40 ரன்கள் சேர்த்தனர். அடுத்து வந்த ஹோப், கெயிலுடன் சேர்ந்தார். அதிரடியாக ஆடிய கெயில் 19 பந்துகளில் அரை சதம் அடித்தார். மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்களில் மிக விரைவாக அரை சதம் அடித்த வீரர் எனும் பெருமையை கெயில்  பெற்றார். இதற்கு முன் டேரன் சாமே 20 பந்துகளில் அரைசதம் அடித்ததே சாதனையாக இருந்தது. அதை கெயில் முறியடித்தார்.

கெயில் 27பந்துகளில் 77 ரன்கள் சேர்த்திருந்த போது, மார்க் உட்  பந்துவீச்சில் போல்டாகினார். கெயிலின் கணக்கில் 9 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும். ஹோப் 13 ரன்களில் வெளியேறினார்.

பிராவோ 7 ரன்னிலும், ஹெட்மெயர் 11 ரன்னும் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 12.1 ஓவர்களில் 115 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது மேற்கிந்தியத் தீவுகள் அணி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

36 mins ago

சினிமா

52 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்