இறுதிக்கட்ட ஓவர்களில் அசத்த காத்திருப்பவர்கள்

By செய்திப்பிரிவு

ஆன்ட்ரூ டை

கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஆன்ட்ரூ டை கவனிக்கப்படக் கூடிய பந்துவீச்சாளர். கடந்த சீசனில்  தொடக்க மற்றும் இறுதிக் கட்ட ஓவர்களில் பந்து வீச்சில் சிறந்த பங்களிப்பை செய்திருந்தார். யார்க்கர், உயரம் குறைந்த புல்டாஸ், துல்லியம் தவறாமை, ஸ்விங் என பந்து வீச்சில் பல்வேறு கலவைகளை கொண்டவர். கடந்த ஆண்டு14 போட்டிகளில் விளையாடிய ஆன்ட்ரூ டை 24 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

புவனேஷ்வர் குமார்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பிரதான வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார். ஆஃப் கட்டர், லெக் கட்டர், வேகம் குறைத்து வீசும் ‘நக்குல்’ வகையிலான பந்து வீச்சு என மாற்றி மாற்றி வீசும் திறமை கொண்டவர். இறுதிக்கட்ட ஓவர்களில் எதிரணியின் ரன்குவிப்பை கட்டுப்படுத்துவதில் சிறந்தவர்.

ஜஸ்பிரித் பும்ரா

சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க சிறப்பான பந்துவீச்சாளர்களில் ஜஸ்பிரித்  பும்ராவும் ஒருவர். வித்தியாசமான கை அசைவுகளுடன் பும்ரா பந்துவீசினாலும், துல்லியமான யார்கர்களை வீசுவதில் சிறந்தவர்.  மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியத் துருப்புச் சீட்டாக பும்ரா இருக்கக்கூடும்.

சுனில் நரேன்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் முக்கிய வீரராக இருப்பவர் சுனில் நரேன்.  மேற்கிந்தியத் தீவுகளை சேர்ந்த அவர், கடந்த 2012, 2014-ம் ஆண்டில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றதில் பிரதான பங்கு வகித்தார். ஐபிஎல் போட்டியில் இதுவரை 98 போட்டிகளில் பங்கேற்று 112 விக்கெட்டுகளை வீழத்தியுள்ளார், சராசரியாக ஓவருக்கு  6.53 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்கக் கூடியவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

15 mins ago

சுற்றுச்சூழல்

38 mins ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

4 hours ago

வலைஞர் பக்கம்

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்