ஆஸ்திரேலியன் ஓபன்: ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார்

By ஏபி

மெல்போர்னில் நடந்து வந்த ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை நவாமி ஒசாகா முதல் முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

ஜப்பானைச் சேர்ந்த ஒரு வீராங்கனை முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வெல்வதும், தரவரிசையில் முதலிடத்துக்குச் செல்வதும் இது முதல் முறையாகும்.  கடந்த ஆண்டு இறுதியில் யு.எஸ். ஓபன் பட்டத்தை வென்ற நிலையில், தொடர்ச்சியாக நவாமி பெறும் 2-வது பட்டம் இதுவாகும். இதையடுத்து தரவரிசையில் முதலிடத்துக்கு ஒசாகா முன்னேறுகிறார்.

மெல்போர்னில் நடந்து வரும் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி இன்று நடந்தது. இதில் செக் குடியரசு வீராங்கனை பெட்ரோ விட்டோவை எதிர்கொண்டார் ஜப்பான் வீராங்கனை நவாமி ஒசாகா.

பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் விட்டோவாவை 7-6(2), 5-7, 6-4 என்ற செட்கணக்கில் தோற்கடித்தார் ஒசாகா. முதல் செட்டையே கடும் போராட்டத்துக்கு பின்புதான் ஒசாகா கைப்பற்றினார். ஆனால், 2-வது செட்டில் விட்டோவாவின் ஆட்டத்துக்கு முன் தோற்றுப்போன ஒசாகா அதை அவரிடம் பறிகொடுத்தார். இதனால், 3-வது செட்டை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்ற பரபரப்பு நிலவியது. ஆனால், கடந்த இரு செட்களில் விளையாடியதைக் காட்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஒசாகா. அவரின் ஏஸ்கள், துல்லியமான சர்வீஸ்கள், பந்தை திருப்பி அனுப்பும் முறை ஆகிய விட்டோவாவை கிறங்கடித்தன. இதனால், கடந்த இரு செட்களைவிட விரைவாக 6-4 என்ற கேம்களிலேயே வென்றார்.

கடந்த 2014-15-ம் ஆஅடு செரீனா வில்லியம்ஸுக்குபின், தொடர்ந்து இரு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற 2-வது வீராங்கனை ஒசாகா ஆவார். கடந்த 1997,1998-ம் ஆண்டுகளில் மார்டினா ஹிங்கிஸ் இந்த சாதனையை இளம் வயதில் செய்திருந்தார். அவரின் சாதனையை இப்போது ஒசாகா முறியடித்துவிட்டார்.

முன்னாள் விம்பிள்டன் சாம்பியனான விட்டோவோ கடந்த 2016-ம் ஆண்டு வீட்டில் நடந்த ஒரு கத்திக்குத்து சம்பவத்துக்குப் பின் இரு ஆண்டுகள் டென்னிஸ் விளையாடாமல் இருந்துவந்தார். அதன்பின் அவர் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இறுதிப்போட்டிவரை வந்தது கடந்த 3 ஆண்டுகளில் இது முதல் முறையாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்