பேட்டிங்கில் தோனியை முறியடித்த ரிஷப் பந்த், ஸ்டீவ் ஸ்மித்தையும் கடந்த புஜாரா

By செய்திப்பிரிவு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 521 ரன்களை, 3 சதங்களுடன் விளாசித்தள்ளிய செடெஸ்வர் புஜாரா, ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் ஸ்டீவ் ஸ்மித்தைப் பின்னுக்குத் தள்ளி 3ம் இடம் பிடித்துள்ளார். புஜாரா தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

அதே போல் சிட்னியில் தனது மிகச்சிறந்த தனிப்பட்ட ஸ்கோரான 159 ரன்களை எடுத்து கிரிக்கெட் பண்டிதர்களையும் கவர்ந்த ரிஷப் பந்த் 21 இடங்கள் பாய்ச்சல் கண்டு டாப் 20-க்குள் நுழைந்து 17வது இடம் பிடித்துள்ளார்.

 

அதே போல் தரவரிசைப் புள்ளிகளில் ரிஷப் பந்த் 673 புள்ளிகள் பெற்றுள்ளார். இது இந்திய விக்கெட் கீப்பர்களிலேயே அதிகப் புள்ளிகளாகும்.  தோனி இதற்கு முன்னர் எடுத்த 662 புள்ளிகளே பேட்டிங்கில் இந்திய விக்கெட் கீப்பர் தரவரிசைப் புள்ளிகளில் அதிகம், தற்போது ரிஷப் பந்து தோனியைப் பின்னுக்குத் தள்ளினார்.  பந்த் 350 ரன்களை எடுத்து புஜாராவுக்கு அடுத்த இடத்திலும் 20 வீரர்களை அவுட் ஆக்கியதும் அவருக்கு சிறப்பு சேர்த்துள்ளது.

 

பந்து வீச்சில் ரவீந்திர ஜடேஜா 1 இடம் முன்னேறி 5வது இடம் பெற்றுள்ளார். ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஜேசன் ஹோல்டரைக் கடந்து 2ம் இடத்துக்கு முன்னேறினார் ஜடேஜா.

 

தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மென் ஐடன் மார்க்ரம் டாப் 10-ல் நுழைந்துள்ளார். தெம்பா பவுமா மெல்ல டாப் 30-க்குள் வந்துள்ளார்.

 

பந்து வீச்சில் வெர்னன் பிலாண்டர் 3வது இடத்துக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் 16 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஆளடிக்கும் ஆக்ரோஷ வேகப்பந்து வீச்சாளர் டுவான் ஆலிவியர் 36ம் இடத்துக்கு வந்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

4 hours ago

உலகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

வேலை வாய்ப்பு

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

கல்வி

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்