வேகமாக 100 விக்கெட்டுகளை எட்டி ஷமி சாதனை

By பிடிஐ

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்தியபோது, சர்வதேச ஒருநாள் அரங்கில் தனது 100-வது விக்கெட்டை வீழ்த்திய மைல் கல்லை எட்டினார்.

இதன் மூலம் 100 விக்கெட்டுகளை மிகவேகமாகத் தனது 56-வது போட்டியில் அடைந்த இந்திய வீரர் எனும் சிறப்பை முகமது ஷமி பெற்றார்.

நேப்பியர் நகரில் இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.

ஆட்டத்தின் 2-வது ஓவரை வீசிய முகமது ஷமி, நியூசிலாந்து வீரர் மார்டின் கப்தில் விக்கெட்டை வீழ்த்தியபோது, சர்வதேச ஒருநாள் அரங்கில் தனது 100-வது விக்கெட்டை வீழ்த்தினார்.

தனது 56-வது போட்டியில் 100-வது விக்கெட்டை முகமது ஷமி கைப்பற்றியுள்ளார். 100விக்கெட்டுகளை எந்த இந்திய வீரரும் இந்த அளவுக்கு வேகமாக அடைந்தது இல்லை.

இதற்கு முன் 100 விக்கெட்டுகளை இர்பான் பதான் 59 போட்டிகளில் அடைந்திருந்ததுதான் சாதனையாக இருந்தது அதை ஷமி முறியடித்தார். மேலும், ஜாகீர்கான் 65 போட்டிகளிலும், அஜித் அகர்கர் 67 போட்டிகளிலும், ஜவஹல் சிறீநாத் 68-வது போட்டியிலும் 100 விக்கெட்டுகளை எட்டி இருந்தனர்.

சர்வதேச அளவில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை எட்டியதில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் முதலிடத்தில் இருக்கிறார். அவர் 44 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை எட்டினார்.

அதற்கு அடுத்தார்போல் ஆஸ்திரேலிய வீரர் மிட்ஷெல் ஸ்டார்க் 53போட்டிகளிலும், பாகிஸ்தான் வீரர் சாக்லைன் முஷ்டாக் 53 போட்டிகளிலும், ஷேன் பாண்ட் 54 போட்டிகளிலும், பிரட் லீ 55 போட்டிகளிலும் அடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

26 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

9 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்