கேரி சோபர்ஸுக்குப் பிறகு நம்பர் 1 ஜேசன் ஹோல்டர்: இங்கிலாந்தை வீழ்த்திய இரட்டைச் சதத்துக்குப் பிறகு புதிய மகுடம்

By செய்திப்பிரிவு

இங்கிலாந்துக்கு எதிரான பார்பேடோஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 8ம் நிலையில் இறங்கி 202 ரன்கள் விளாசி போட்டியை வெற்றி பெறவைத்த,  இந்த ஆண்டின் மிகச்சிறந்தச் சதத்தை அடித்த ஜேசன் ஹோல்டர்,  சர் கேரிபீல்ட் சோபர்ஸ் சாதனையை சமன் செய்துள்ளார்.

 

ஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் கேரி சோபர்ஸுக்குப் பிறகு நம்பர் 1 இடத்தை ஜேசன் ஹோல்டர் பிடித்துள்ளார்.

 

இந்த இரட்டைச் சதத்தின் மூலம் பல பேட்டிங் சாதனைகளை ஹோல்டர் முறியடித்துள்ளார். ரன்கள் அடிப்படையில் வெஸ்ட் இண்டீஸின் 3வது மிகப்பெரிய வெற்றியாகும் இது.  1974-ல் கேரி சோபர்ஸ் டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் முதலிடம் வகித்த பிறகு தற்போது 44 ஆண்டுகளுக்குப் பிறகு ஹோல்டர் அந்த இடத்தைப் பிடித்துள்ளார்.

 

ஒரே இன்னிங்ஸில் ஷாகிப் அல் ஹசன், ஜடேஜாவைப் பின்னுக்குத்தள்ளி 440 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார் ஹோல்டர்.  பேட்டிங் தரவரிசையில் 58-ம் இடத்திலிருந்து 33ம் இடத்துக்குச் சென்றுள்ளார்.

 

பார்பேடோஸ் டெஸ்ட்டில் ஹோல்டரின் இரட்டைச் சதத்துடன் இவரும் ஷேன் டவ்ரிச்சும் சதம் அடித்து இருவரும் 295 ரன்கள் சாதனை கூட்டணி அமைக்க, பவுலிங்கில் ராஸ்டன் சேஸ் மிகச்சிறந்த பவுலிங்காக 60 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

49 secs ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

49 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்