64 பள்ளி அணிகள் பங்கேற்கும் ஜேஎஸ்கே டி 20 கிரிக்கெட் 24-ல் தொடக்கம்: சென்னை உட்பட 12 மாவட்டங்களில் நடைபெறுகிறது

By செய்திப்பிரிவு

ஜூனியர் சூப்பர் கிங்ஸ் (ஜேஎஸ்கே) கோப்பைக்கான மாநில பள்ளிகள்இடையேயான டி 20 கிரிக்கெட் தொடர் கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக 5-வது சீசன் போட்டிவருகிற 24-ம் தேதி தொடங்குகிறது.

சென்னை, கோவை, சேலம்,திருச்சி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர், வேலூர், கிருஷ்ணகிரி, மதுரை,திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய12 மாவட்டங்களில் நடைபெறுகிறது.

 முதல் கட்ட போட்டிகள் வரும் 24-ம் தேதி தொடங்குகிறது. முத்தூட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆதரவுடன் நடைபெறும் இந்த போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 64 பள்ளிகள் கலந்து கொள்கின்றன. சென்னையில் நடைபெறும் போட்டியில் 16 பள்ளிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன. 2-வதுகட்ட போட்டிகள் திருநெல்வேலியில் ஜனவரி 22-ம் தேதி தொடங்குகிறது. இந்த சுற்றில் 12 லீக் ஆட்டங்களும் 3 நாக் அவுட் ஆட்டங்களும் இடம் பெறுகின்றன.

இதில் சென்னையில் நடைபெறும் போட்டியில் முதல் இருஇடங்களை பிடிக்கும் அணிகள் மற்ற  மாவட்டங்களில் நடத்தப்படும்போட்டிகளில் முதல் இடத்தை பிடிக்கும் அணிகள் என மொத்தம் 8 அணிகள் பலப்பரீட்சை நடத்தும்.

தொடரை வெல்லும் அணிக்கு சுழற்கோப்பை வழங்கப்படும் என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த தொடருக்கான கோப்பை மற்றும் அணிகளின் சீருடையை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நேற்றுசென்னையில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் நடைபெற்றது.

விழாவில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அம்பதி ராயுடு,மோகித் சர்மா, முத்தூட் நிறுவனத்தின் திட்ட மற்றும் விளம்பர துணை பொதுமேலாளார் அபினவ் ஐயர், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் தலைவர் பி.ரமேஷ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

32 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்