‘நைஸ்’, ‘ஜென்டில்மேன்’ கிரிக்கெட் ஆடினால் சத்தியமாக வெல்ல முடியாது: லாங்கர் மீது மைக்கேல் கிளார்க் காட்டம்

By செய்திப்பிரிவு

முன்னாள் ஆஸ்திரேலிய அணி கேப்டன் மைக்கேல் கிளார்க், சமீபத்திய ஆஸ்திரேலிய அணியினரின் ஒழுக்கக் கட்டுப்பாட்டு விதிகளை கடுமையாகச் சாடியுள்ளார். அனைவருக்கும் பிடித்த அணியாக இருக்க வேண்டுமா? அல்லது அனைவரும் மதிக்கக் கூடிய அணியாக இருக்க வேண்டுமா? என்று ஜஸ்டின் லாங்கர்,  டெஸ்ட் கேப்டன் டிம் பெய்ன் ஆகியோருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் பால் டேம்பரிங் செய்து முன் கூட்டியே எதிரணியைத் திட்டமிட்டு, மோசடி செய்து வெல்லும் மோசமான உத்தியினால் இன்று வார்னர், ஸ்மித், பேங்கிராப்ட் வீட்டில் உள்ளனர். இதனையடுத்து களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ஒழுக்கக் கட்டுப்பாடு விதிகள், வீரர்கள் உடன்படிக்கை, கருத்தொருமித்தல், ‘உயர்தர நேர்மை’ என்று லாங்கரும், டிம் பெய்ன் மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா செயலில் இறங்கியது.

இதனால், பாவம் ஆஸ்திரேலியா, ஸ்லெட்ஜிங் செய்ய முடியாமல் அதற்குப் பதிலாக அசட்டுச் சிரிப்பையே களத்தில் உதிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கவிருக்கையில், மைக்கேல் கிளார்க் இந்த ஒழுக்க விதிகள் மீது காட்டம் காட்டியுள்ளார்.

“ஆஸ்திரேலிய கிரிக்கெட் தங்களைப் பிறர் விரும்புவார்களா இல்லையா என்ற கவலையை விட்டு விட வேண்டும். மாறாக நம் அணியை மதிக்க வேண்டும் என்பது பற்றிய கவலையே உண்மையான கவலை.  உங்களுக்குப் பிடித்திருக்கிறதோ, இல்லையோ கடினமான முறையில் ஆடுவதுதான் ஆஸ்திரேலிய பாணி, அதுதான் நம் ரத்தத்தில் கலந்துள்ளது.

ஆஸ்திரேலிய பாணியிலிருந்து வெளியேறினால் உலகில் மற்ற அணிகளுக்கு நம்மைப் பிடிக்கும், அடுத்தவர்களுக்கு பிடித்தமான அணியாக இருப்போம், ஆனால்   ‘---’ க்கூட வெல்ல மாட்டோம், சத்தியமாக வெல்லப்போவதில்லை. எல்லோரும் வெற்றியையே விரும்புகின்றனர்” என்றார் மைக்கேல் கிளார்க்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

9 mins ago

சினிமா

14 mins ago

இந்தியா

35 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்