ஹீரோ ஐ லீக் கால்பந்து தொடர்: 2-வது வெற்றி பெறுமா சென்னை சிட்டி எஃப்சி?- கோவா சர்ச்சில் பிரதர்ஸ் அணியுடன் கோவையில் இன்று மோதல்

By ஆர்.கிருஷ்ணகுமார்

ஹீரோ ஐ லீக் கால்பந்து தொடரின் 12-வது சீசன் போட்டிகள் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள சென்னை சிட்டி எஃப்.சி அணி தனது முதல் ஆட்டத்தில் புவனேஸ்வர் இந்தியன் ஏரோஸ் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது.

இந்நிலையில் சென்னை சிட்டி எஃப்.சி தனது 2-வது ஆட்டத்தில் கோவா சர்ச்சில் பிரதர்ஸ் அணியுடன் இன்று மோதுகிறது. மாலை 5 மணிக்கு கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சானல் 3 நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

கடந்த சீசனில் கோவா சர்ச்சில் பிரதர்ஸ் அணியுடன் சென்னை சிட்டி எஃப்.சி இரண்டு முறை மோதியது. இதில் கோவாவில் நடைபெற்ற போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கிலும், கோவையில் நடைபெற்ற போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கிலும் சென்னை சிட்டி எஃப்.சி வெற்றி பெற்றிருந்தது.

இந்த சீசனில் கோவா சர்ச்சில் பிரதர்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பஞ்சாப் மினர்வா அணியுடன் சொந்த மண்ணில் மோதியிருந்தது. இந்த ஆட்டம் கோல்களின்றி டிராவில் முடிவடைந்திருந்தது. இதனால் கோவா அணி முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் களமிறங்குகிறது.

சென்னை சிட்டி எஃப்.சி அணி யின் பயிற்சியாளர் அக்பர் நவாஸ் கூறுகையில்,“பலம் பொருந்திய கோவா சர்ச்சில் பிரதர்ஸ் அணியுடன் மோதுகிறோம். கடந்த சீசனில் கோவாவுக்கு எதிரான 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றிருந்தாலும், தற்போதைய போட்டி கடுமையானதாகவே இருக்கும். உள்ளூர் மைதானம் என்பதும், கடந்த போட்டியில் கிடைத்த வெற்றியும் எங்கள் அணி வீரர்களை உற்சாகப்படுத்தி யுள்ளது. எனவே இந்த ஆட்டத் திலும் வெற்றி பெறுவோம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

13 mins ago

தமிழகம்

7 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

43 mins ago

இந்தியா

37 mins ago

தமிழகம்

54 mins ago

வாழ்வியல்

45 mins ago

இந்தியா

59 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்