தோனியைக் கடந்த ரிஷப் பந்த்: 5 போட்டிகளில் அபாரம்

By செய்திப்பிரிவு

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் அறிமுகமான 5 போட்டிகளிலேயே மூத்த வீரர் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.

கூல் கேப்டன் எம்.எஸ்.தோனி கடந்த 2014-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இதுவரை தோனி 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 4,876 ரன்கள் சேர்த்து, 38.09 சராசரி வைத்துள்ளார். 9 ஆண்டுகல் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 6 சதங்களும், 33 அரைசதங்களும் அடித்துள்ளார். 256 கேட்சுகளையும், 38 ஸ்டெம்பிங்களையும் செய்து அபாரமான சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருந்து வருகிறார்.

தோனிக்கு அடுத்து அணிக்கு விக்கெட் கீப்பிங் பணிக்கு கொண்டுவரப்பட்ட விருதிமான் சாஹா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் போதுமான அளவு போட்டிகளில் விளையாடவில்லை, மற்றும் தோனி அளவுக்கு சாதனைகளையும் செய்யவில்லை.

இந்நிலையில், இங்கிலாந்து தொடரில் 3 போட்டிகளிலும், மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக 2 போட்டிகள் என மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பந்த் வாய்ப்பு பெற்றார். 5 போட்டிகளிலேயே தோனியின் முக்கிய சாதனை ஒன்றை முறியடித்துள்ளார்.

ரிஷாப் பந்த் தான் பங்கேற்ற 5 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி 346 ரன்கள் சேர்த்துள்ளார். அவரின் சராசரி 43.25 ஆக வைத்துள்ளார்.

ஆனால், தோனி கிரிக்கெட் விளையாட வரும் போது, தனது முதல் 5 போட்டிகளில் 297 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார். தோனி 5 போட்டிகளில் சேர்த்த 297 ரன்களைக் காட்டிலும், ரிஷாப் பந்த் 5 போட்டிகளில் 346 ரன்கள் சேர்த்து அவரை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

46 mins ago

ஜோதிடம்

43 mins ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

உலகம்

4 hours ago

மேலும்