உலகின் வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீராங்கனைக்கு இன்று 107வது பிறந்த தினம்

By செய்திப்பிரிவு

உலகின் வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீராங்கனையான எய்லின் ஆஷ் என்பவருக்கு இன்று 107வது பிறந்த தினம். இதனை ஐசிசி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் தளத்தில் அவர் யோகா செய்யும் வீடியோவுடன் வெளியிட்டு மகிழ்ந்துள்ளது.

இவர் ஜூன் 1937ம் ஆண்டு இங்கிலாந்துக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். அவருக்கு இன்று 107வது பிறந்த தினம்.

அக்டோபர் 30, 1911ம் ஆண்டு இவர் லண்டன் ஹைபரியில் பிறந்தார்.  இவர் எய்லீன் ஆஷ் என்றும் அழைக்கப்படுகிறார், எய்லின் வீலன் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஒரு ஸ்பெஷலிஸ்ட் பவுலர்.

இவர் சிவில் சர்வீஸச் உமன், இங்கிலாந்து மகளிர் கிரிகெட்,  மிடில்செக்ஸ் மகளிர் அணி, சவுத் மகளிர் அணிக்காக ஆடியுள்ளார்.

இவர் 1937ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் களம் கண்டார். 3 போட்டிகளில் 10 விக்கெட்டுகளைச் சாய்த்தார். பிறகு 1948-49-ல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தொடர்களுக்குத் தேர்வு செய்யப்பட்டார், அதில் 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடி விக்கெட்டுகள் எதையும் கைப்பற்ற முடியவில்லை.

ஆனால் மாகாண அளவிலான போட்டிகளில் இவர் விக்டோரியா கண்ட்ரி அணிக்காக 102 நாட் அவுட் மற்றும் 10 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

இவர்தான் இன்று உயிர்வாழும் அதிக வயதுடைய டெஸ்ட் கிரிக்கெட் வீராங்கனையாவார்.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

8 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்