மே.இ.தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டரிடம் மன்னிப்பு கேட்ட இயன் கோல்ட்

By செய்திப்பிரிவு

இளம் பிரித்வி ஷாவுக்கு டெஸ்ட் போட்டிகளில் கனவுத்தொடக்கம் கிடைத்துள்ளது, 2 டெஸ்ட் போட்டிகளில் 237 ரன்கள் எடுத்து அபாரத் தொடக்கம் கண்டதால் தொடர் நாயகன் விருது பெற்றார்.

இந்நிலையில் நேற்று 72 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து இந்திய அணி 2வது இன்னிங்ஸை ஆடிய போது ஜேசன் ஹோல்டர் பந்து வீச்சில் ஷார்ட் பிட்ச் பந்து ஒன்று எழும்பாமல் தாழ்வாக வந்தது, எழும்பும் என்று நினைத்து பிரித்வி ஷா குனிந்தார், பந்து அவரது கையில் பட்டது.

கடும் எல்.பி.முறையீட்டை நடுவர் இயன் கோல்ட் நாட் அவுட் என்று மறுத்துத் தீர்ப்பளித்தார். ஜேசன் ஹோல்டர் மேல்முறையீடு செய்தார், அதில் பந்து ஸ்டம்பில் படுமாறு ரீப்ளே காட்டியது, ஆனால் களநடுவர் நாட் அவுட் தீர்ப்பையே 3வது நடுவரும் ஏற்றுக் கொள்ள பிரித்வி ஷா நாட் அவுட். பந்து லைனில் பிட்ச் ஆகி பைல்களை அடிக்கும் என்று ரீப்ளே காட்டியும் நாட் அவுட் ஆனது.

இது மே.இ.தீவுகளுக்கு கடும் ஏமாற்றம் அளித்தது. உடனே நடுவர் இயன் கோல்ட், மே.இ.தீவுகள் கேப்டனிடம் மன்னிப்புக் கேட்டார். அதன் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

இதனை சில ட்விட்டர்வாசிகள் வெளியிட்டு நடுவர் இயன் கோல்ட் மன்னிப்பு கேட்டதை ‘மிகப்பெரிய செய்கை’ என்று பாராட்டி வருகின்றானர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 mins ago

சினிமா

15 mins ago

சினிமா

18 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

16 mins ago

சினிமா

34 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

28 mins ago

சினிமா

39 mins ago

சினிமா

42 mins ago

வலைஞர் பக்கம்

46 mins ago

சினிமா

51 mins ago

மேலும்