மாஸ்டர்ஸ் டென்னிஸ் - ஃபெடரர் புதிய சாதனை

By செய்திப்பிரிவு

ஏடிபி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் 300-வது வெற்றியைப் பதிவு செய்தார் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர். சர்வதேச அளவில் இந்த மைல்கல்லை எட்டிய முதல் வீரர் ஃபெடரர்தான்.

அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்று வரும் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்றில் 7-6 (4), 5-7, 6-2 என்ற செட் கணக்கில் கனடாவின் வசேக் போஸ்பிஸிலை தோற்கடித்ததன் மூலம் ஃபெடரர் புதிய சாதனையை எட்டினார்.

ஃபெடரர் தனது 200-வது மாஸ்டர்ஸ் வெற்றியையும் 5 ஆண்டுகளுக்கு முன்பு இதே சின்சினாட்டி மாஸ்டர்ஸ் போட்டியில்தான் பதிவு செய்தார். அப்போது லெய்டன் ஹெவிட்டை தோற்கடித்தார். போஸ்பிஸிலுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் செட்டை டைபிரேக்கர் வரை சென்று கைப்பற்றிய ஃபெடரர், அடுத்த செட்டில் துரதிருஷ்டவசமாக 12-வது கேமில் தனது சர்வீஸை இழந்து அந்த செட்டையே கோட்டைவிட்டார். பின்னர் நடைபெற்ற வெற்றியைத் தீர்மானிக்கும் 3-வது செட்டில் அபாரமாக ஆடிய ஃபெடரர் 6-2 என்ற கணக்கில் மிக எளிதாக வென்று போட்டியை முடிவுக்கு கொண்டு வந்தார்.

இதுவரை 5 முறை சின்சினாட்டி மாஸ்டர்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் ஃபெடரர், போஸ்பிஸிலுக்கு எதிராக 6 ஏஸ் சர்வீஸ்களை அடித்தார். அடுத்த சுற்றில் பிரான்ஸின் மான்பில்ஸை சந்திக்கிறார் ஃபெடரர்.

தைவானின் லூ யென் ஷன் 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் இருந்த செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச்சுக்கும், போலந்தின் ஜெர்ஸி ஜானோவிச் 6-4, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 7-வது இடத்திலிருந்த பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவுக்கும் அதிர்ச்சி தோல்வியளித்தனர்.

ஸ்பெயினின் டேவிட் ஃபெடரர், பிரிட்டனின் ஆன்டி முர்ரே உள்ளிட்டோர் 2-வது சுற்றில் வெற்றி கண்டு 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

விம்பிள்டன் நாயகிகள் அவுட்

கடந்த மாதம் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற செக்.குடியரசின் பெட்ரா விட்டோவா, இறுதிச்சுற்று வரை முன்னேறிய கனடாவின் யூஜீனி புச்சார்டு ஆகியோர் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினர். மகளிர் ஒற்றையர் பிரிவில் புதன்கிழமை நடைபெற்ற 2-வது சுற்றில் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விட்டோலினா 6-2, 7-6 (2) என்ற நேர் செட்களில் பெட்ராவையும், ரஷ்யாவின் ஸ்வெட்லானா குஸ்நெட்சோவா 6-4, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் புச்சார்டையும் தோற்கடித்தனர்.

பயஸ் ஜோடி தோல்வி

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-செக்.குடியரசின் ரடேக் ஸ்டெபானெக் ஜோடி 2-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி கண்டது. இந்த ஜோடி 1-6, 6-4, 8-10 என்ற செட் கணக்கில் கனடாவின் வசேக் போஸ் பிஸில்-அமெரிக்காவின் ஜேக் சோக் ஜோடியிடம் வீழ்ந்தது.

போஸ்பிஸில்-ஜேக் சோக் ஜோடி தங்களின் முதல் சுற்றில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-பாகிஸ்தானின் குரேஷி ஜோடியைத் தோற்கடித் தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

உலகம்

35 mins ago

தமிழகம்

44 mins ago

இந்தியா

51 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்