பாரா ஆசிய விளையாட்டு போட்டி: உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றார் சரத் குமார்; மாரியப்பனுக்கு வெண்கலப் பதக்கம்

By செய்திப்பிரிவு

இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் பாரா ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் சரத் குமார் தங்கப் பதக்கம் வென்றார். 26 வயதான சரத் குமார் 1.90 மீட்டர் உயரம் தாண்டி முதலிடம் பிடித்தார். வெள்ளி, வெண்கலப் பதக்கத் தையும் இந்திய வீரர்களே கைப் பற்றினர். ரியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் 1.67 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தையும், வருண் பாத்தி 1.82 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

ஆடவருக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் சுந்தர் சிங் குர்ஜார் 61.33 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கமும், ரிங்கு (60.92 மீட்டர்) வெண்கலப் பதக்க மும் கைப்பற்றினர். இலங்கையின் தினேஷ் ஹெராத் (61.84) தங்கப் பதக்கம் வென்றார். பாராலிம்பிக்கில் இரு முறை தங்கப் பதக்கம் வென்ற தேவேந்திர ஜஜாரியா (59.17) 4-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தார். ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் ஆனந்தன் குணசேகரம் வெள்ளிப் பதக்கமும், வினய் குமார் வெண் கலப் பதக்கமும் கைப்பற்றினர். மகளிருக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் ஜெயந்தி பீஹரா வெள்ளிப் பதக்கமும், ஆடவருக்கான 400 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சலில் ஸ்வப்னில் பாட்டீல் வெண்கலப் பதக்கமும் வென்றனர். - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

37 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

உலகம்

4 hours ago

ஆன்மிகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்