ஆதங்கங்களைக் கொட்டிய கருண் நாயர், முரளி விஜய்: நடவடிக்கைக்குத் தயாராகும் பிசிசிஐ?

By பிடிஐ

எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையிலான அணித்தேர்வுக்குழுவை அதன் ‘தேர்வுக்கொள்கைகளுக்காகவும்’ ‘தொடர்பு கொள்ளாததற்கும்’ தங்கள் ஆதங்கதைக் கொட்டிய முரளி விஜய் மற்றும் கருண் நாயர் மீது நடவடிக்கைக்கு பிசிசிஐ தயாராகி வருவதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து  பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பெயர் சொல்ல விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியபோது, “தேர்வுக்கொள்கைப் பற்றிப் பேசியதன் மூலம் விஜய், கருண் நாயர் மத்திய் ஒப்பந்தத்தை மீறியுள்ளனர். பிசிசிஐ விதிகளின் படி முடிந்த தொடர்கள் பற்றிய கருத்துகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கக் கூடாது. ஹைதராபாத்தில் சிஓஏ கூட்டம் அக்டோபர் 11-ல் நடைபெறுகிறது. அதில் இந்தவிவகாரம் எழுப்பப்படும்” என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து சிஓஏ தலைவர் வினோத் ராய் கூறியபோது, “இது முற்றிலும் குப்பையானது. தேர்வுக்குழுவின் தரப்பிலிருந்து வீரர்களை தொடர்பு கொள்ளவில்லை என்பது இல்லவேயில்லை. கருண், விஜய் கருத்துக்களை அணிதேர்வாளர்கள் வசம் விட்டுவிட்டோம்” என்றார்.

இதில் 5 டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்தில் உட்கார வைக்கப்பட்ட கருண் நாயர் போதாக்குறைக்கு மே.இ.தீவுகளுக்கு எதிராக நீக்கப்பட்டார்.

விஜய் 2 டெஸ்ட் போட்டிகளுக்கு அணியிலிருந்தே நீக்கப்பட்டார், ஆனால் அவர் எசெக்ஸ் அணிக்கு 3 போட்டிகளில் ஆடினார். ஆகவே கருண் நாயர் சிறியவர் அவரை மன்னிக்கலாம் என்று ஒருதரப்பினர் கூற, விஜய் கூறிய கருத்துகள் பிசிசிஐ-யை காயப்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

2 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

க்ரைம்

6 hours ago

மேலும்