காமன்வெல்த் - டேபிள் டென்னிஸ்: இந்திய ஜோடிக்கு வெள்ளி உறுதி

By செய்திப்பிரிவு

காமன்வெல்த் போட்டியின் ஆடவர் இரட்டையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் அஜந்தா ஷரத் கமல்-அந்தோணி அமல்ராஜ் ஜோடி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இதன்மூலம் டேபிள் டென்னிஸில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் உறுதியாகியுள்ளது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடவர் இரட்டையர் அரையிறுதியில் ஷரத் கமல்-அமல்ராஜ் ஜோடி 11-7, 12-10, 11-3 என்ற நேர் செட்களில் சிங்கப்பூரின் யாங் ஜி-ஜான் ஜியான் ஜோடியைத் தோற்கடித்தது. ஷரத் கமல்-அமல்ராஜ் ஜோடி தங்களின் இறுதிச்சுற்றில் சிங்கப்பூரின் மற்றொரு ஜோடியான காவ் நிங்-லீ ஹூ ஜோடியை சந்திக்கிறது.

ஆடவர் ஒற்றையர் 3-வது சுற்றில் ஷரத் கமல் 11-5, 11-6, 11-7, 11-4 என்ற நேர் செட்களில் நைஜீரியாவின் செகுன் டோரிலாவை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு 3-வது சுற்றில் இந்தியாவின் செளம்யஜித் கோஷ் 11-5, 2-11, 11-8, 11-8, 11-9 என்ற செட் கணக்கில் உலகின் 6-ம் நிலை வீரரான சிங்கப்பூரின் லீ ஹுவுக்கு அதிர்ச்சி தோல்வியளித்து காலிறுதியை உறுதி செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தொழில்நுட்பம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்