ஸ்பெயின் கால்பந்து மூத்த வீரர்களில் ஒருவரான டேவிட் சில்வா சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஸ்பெயின் கால்பந்து அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராக இருந்தவர் டேவிட் சில்வா. 32 வயதான சில்வா, தற்போது மான்செஸ்டர் சிட்டி கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை ஸ்பெயின் அணிக்காக 125 போட்டிகளில் பங்கேற்று 35 கோல்கள் அடித்து சாதனை புரிந்துள்ளார்.
சமீபத்தில் ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் நாக்அவுட் சுற்றோடு வெளியேற்றம் கண்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் டேவிட் சில்வாவும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
2010-ம் ஆண்டு ஸ்பெயின் உலகக்கோப்பையில் பட்டம் வெல் லும் போது அந்த அணியில் டேவிட் சில்வா இடம்பிடித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
விளையாட்டு
3 hours ago
க்ரைம்
4 hours ago
உலகம்
5 hours ago
விளையாட்டு
5 hours ago
வேலை வாய்ப்பு
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
கல்வி
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago