முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது வங்கதேச அணி

By செய்திப்பிரிவு

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கயானாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 279 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான அனாமுல் ஹக் ரன் ஏதும் எடுக்காமல் ஜேசன் ஹோல்டர் பந்தில் ஆட்டமிழந்த நிலையில், தமிம் இக்பாலுடன் இணைந்த ஷகிப் அல் ஹசன், இன்னிங்ஸை சிறந்த முறையில் கட்டமைத்தார். அவருக்கு உறுது ணையாக நிதானமாக விளையாடிய தமிம் இக்பால் 146 பந்துகளில், 7 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் சதம் அடித்தார். இது அவரது 10-வது சதமாக அமைந்தது.

சதம் அடிப்பார் என எதிர்பார்க் கப்பட்ட நிலையில் ஷகிப் அல் ஹசன் 121 பந்துகளில், 6 பவுண்டரி களுடன் 97 ரன்கள் எடுத்த நிலையில் தேவேந்திர பிஷூ பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர், 2-வது விக்கெட்டுக்கு தமிம் இக்பாலுடன் இணைந்து 207 ரன் கள் சேர்த்தது ஆட்டத்தின் சிறப்பம் சமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய சபிர் ரஹ் மான் 3 வெளியேற கேப்டன் முஸ் பிகுர் ரகிம் அதிரடியாக விளையாடி 11 பந்துகளில் 30 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். கடைசி இரண்டு ஓவர்களில் மட்டும் வங்கதேச அணி 43 ரன்களை விளாசியிருந்தது. இந்த இரு ஓவர்களையும் ஜேசன் ஹோல்டர், ஆந்த்ரே ரஸ்ஸல் வீசியிருந்தனர்.

தமிம் இக்பால் 160 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 130 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் தேவேந்திர பிஷூ 2 விக்கெட்கள் கைப்பற்றினார்.

280 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் சீரான இடைவெளியில் விக்கெட் களை பறிகொடுத்தது. எவின் லீவிஸ் 17, ஷாய் ஹோப் 6, கிறிஸ் கெயில் 40, ஜேசன் முகமது 10, ஹெட்மியர் 52, ரூவன் பொவல் 0, ஜேசன் ஹோல்டர் 17, ஆந்த்ரே ரஸல் 13, ஆஷ்லே நர்ஷ் 7 ரன் களில் ஆட்டமிழந்தனர். 40.4 ஓவர் களில் 9 விக்கெட்களை இழந்து 172 ரன்கள் எடுத்து தத்தளித்த நிலை யில் தேவேந்திர பிஷூ, அல்ஷாரி ஜோசப் ஜோடி கடைசி விக்கெட் டுக்கு இணைந்து போராடியது. ஆனாலும் அது வெற்றிக்கு உதவ வில்லை.

தேவேந்திர பிஷூ 40 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 29 ரன்களும், அல்ஷாரி ஜோசப் 21 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 29 ரன்களும் விளாச 50 ஓவர்கள் முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணியால் 9 விக்கெட்கள் இழப்புக்கு 231 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. கடைசி விக்கெட்டுக்கு பிஷூ, ஜோசப் ஜோடி 59 ரன்கள் சேர்த்திருந்தது.

வங்கதேச அணி தரப்பில் மோர்டசா 4, முஸ்டாபிஸூர் ரஹ் மான் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக தமிம் இக்பால் தேர்வானார். 48 ரன்கள் வித்தியாசத் தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது ஆட்டம் நாளை நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

54 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்