சக வீரர்களை கிண்டல் செய்த பாண்டியா: பதிலுக்கு ரஸ்க் கொடுத்து கலாய்த்த தோனி

By செய்திப்பிரிவு

சக வீரர்களை ஜாலியாக கிண்டல் செய்த ஹர்திக் பாண்டியை ரஸ்க் கொடுத்து அனுப்பியிருக்கிறார் தோனி

அயர்லாந்து, இங்கிலாந்து அணியுடனான  கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி இங்கிலாந்து புறப்பட்டு சென்றுள்ளது.

இந்த நிலையில் இங்கிலாந்துக்கு செல்லும் பயண நேரத்தில் இந்திய வேக பந்துவீச்சாளர் ஹர்திக் பாண்டியா சக இந்திய வீரர்களுடன் ஜாலியாக  பேட்டி ஒன்றை விமானத்தில் பதிவு செய்திருந்தார். அதை பிசிசிஐ தனது பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டிருக்கிறது.

அதில் ஹர்திக் பாண்டியாவும், சாகலும் மைக் பிடித்து கொண்டு இந்திய கிரிக்கெட் அணியினரிடம் ஜாலியாக கிண்டல்  செய்துக் கொண்டே கேள்வி கேட்கின்றனர். உமேஷ் யாதவ், குல்திப் யாதவ், மனிஷ் பாண்டே என அனைவரிடமும் சிறிய பேட்டி கண்ட ஹர்திக் பாண்டியா அடுத்து தனது இருக்கையில் படுத்துக் கொண்டிருக்கும் தினேஷ் கார்த்திக்கிடம் செல்கிறார்.

அதனைத் தொடர்ந்து கே. எல். ராகுல், ரோஷித் சர்மவிடம் ஜாலியாக உரையாற்றி ஹர்திக் பாண்டியா கடைசியாக திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த தோனியிடம் செல்கிறார்.

அங்குதான் வேடிக்கை,  பாண்டியா ஹாய் மகி பாய் என்று ஆரம்பிப்பதற்குள்... தோனி தனது கையிலிருந்து ரஸ்கை அவரிடம் கொடுத்து அங்கிருந்து செல்லும்படி டாட்டா காண்பிக்க... பாய் மகி பாய்ய்.. என்று அங்கிருந்து சிரித்துக் கொண்டே செல்கிறார் பாண்டியா. தோனியும் கீழே குனிந்தப்படி சிரித்து கொள்கிறார். ( இந்த லிங்க்கை கிளிக் செய்து நீங்கள் வீடியோவை  பார்க்கலாம்.

 

இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் பலரும், இந்திய கிரிக்கெட் வீரர்களை ஜாலியாக கிண்டல் செய்த ஹர்திக் பாண்டியாவை மொத்தமாக வைத்து  தோனி கிண்டல் செய்து விட்டர் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

12 hours ago

வலைஞர் பக்கம்

12 hours ago

மேலும்