ஸ்மார்ட் வாட்ச் அணிய வேண்டாம்: பாக்.வீர்ர்களுக்கு ஐசிசி எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

பாகிஸ்தான் வீரர்கள் களத்தில் விளையாடும்போது ஸ்மார்ட் வாட்ச்களை அணிய வேண்டாம் என்று ஐசிசி பாக்.வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐசிசி ஊழல் தடுப்பு அமைப்பு பாகிஸ்தான் வீரர்கள் ஸ்மார்ட் வாட்ச்கள் அணிய வேண்டாம் என்று எச்சரித்துள்ளது, காரணம் அது சூதாட்டம் மற்றும் மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளது.

ஸ்மார்ட் வாட்ச்கள் ஸ்மார்ட் போன்கள் போலவே செயல்படுவதால் அதிலிருந்து டெக்ஸ்ட் மெசேஜ் உள்ளிட்டவைகளை அனுப்ப முடியும் எனவே பாகிஸ்தான் வீரர்கள் ஸ்மார்ட் வாட்ச்களை அணிவதை தவிர்ப்பது நல்லது என்று எச்சரித்துள்ளது.

தற்போது இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸில் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் ஆடிவருகிறது, லார்ட்ஸ் டெஸ்ட் முதல்நாள் ஆட்டத்தில் பாக். பந்து வீச்சில் 184 ரன்களுக்குச் சுருண்டது இங்கிலாந்து. மொகமது அப்பாஸ் 4 விக்கெட்டுகளையும் ஹசன் அலி 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அலிஸ்டர் குக் 70 ரன்களை அதிகபட்சமாக எடுக்க பென் ஸ்டோக்ஸ் 38 ரன்களை எடுத்தார். தொடர்ந்து ஆடிவரும் பாகிஸ்தான் 2ம் நாள் ஆட்டத்தில் 69/1 என்று ஆடிவருகிறது.

முதல் நாள் ஆட்டத்தில் பாபர் ஆஸம், ஆசாத் ஷபிக் ஆகியோர் ஸ்மார்ட் வாட்ச்களை அணிந்திருந்தனர். தவறுகள் நடக்கவில்லை என்றாலும் ஸ்மார்ட் வாட்ச்கள் அவர்கள் ஸ்மார்ட் போன்களுடன் இணைக்கப்பட்டதா என்பதும் தெரியவில்லை.

இதனை ஹசன் அலி உறுதி செய்தார், “யார் அணிந்திருந்தார்கள் என்று தெரியவில்லை, ஆனால் ஐசிசி ஊழல் தடுப்பு அமைப்பு எங்களிடம் பேசி ஸ்மார்ட் வாட்ச்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவுறுத்தியது.

சல்மான் பட், மொகமது ஆமிர், மொகமது ஆசிப் ஆகியோர் ஸ்பாட் பிக்சிங், மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டில் சிக்கி சிறை சென்று மீண்ட பிறகே பாகிஸ்தான் வீரர்கள் மீது கடும் கண்காணிப்புகள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

26 mins ago

தமிழகம்

16 mins ago

இந்தியா

34 mins ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்