தேதி 27, என் ஜெர்சி எண் 7, எங்களின் 7வது ஐபிஎல் இறுதி: வெற்றிக்குப் பிறகு தோனி குதூகலம்

By இரா.முத்துக்குமார்

குறுகிய வடிவ கிரிக்கெட்டின் சிறந்த கேப்டனான தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் நேற்று இன்னொரு ஐபிஎல் மகுடத்தைச் சூடியது. சன் ரைசர்ஸ் அணியை சற்றும் எதிர்பாராதவிதமாக 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நொறுக்கியது சிஎஸ்கே.

வாட்சன் ஆட்டத்தை ‘நோ-கான்டெஸ்ட்’ என்பார்களே அப்படிக் கொண்டு சென்றார். ரஷீத் கான் பவுலிங்குக்கு மரியாதை கொடுப்போம் என்ற முடிவு சென்னை சூப்பர் கிங்ஸுக்கு கை கொடுத்தது.

இந்நிலையில் ஆட்டம் முடிந்து தோனி கூறியதாவது:

இறுதிப் போட்டிக்கு நுழைகிறோம் எனும்போதே அனைவரும் தங்கள் பங்கு என்னவென்பதை தெரிந்து வைத்திருந்தனர். பீல்டிங்கைத் தேர்வு செய்யும் போது நம் திட்டங்களில் சிறு அட்ஜெஸ்ட்மெண்ட்களை செய்து கொள்ள வேண்டும். இதுதவிர எங்கள் பேட்ஸ்மென்களுக்கு அவர்கள் ஸ்டைல் தெரியும்.

களத்தில் பேட் செய்பவர்கள் கடினமாக உணர்ந்தால் புதிதாக வரும் பேட்ஸ்மெனுக்கும் கடினமாக இருக்கும் என்பது தெரியும்தானே.

ரஷீத் கான் எப்படி சாதுரியமாக வீசுவாரோ, அதேபோல்தான் புவனேஷ்வர் குமாரும் பேட்ஸ்மெனை ஏமாற்றும் ஒரு பவுலர் எனவே ஒரு பவுலர் மட்டும்தான் எங்களுக்கு நெருக்கடி கொடுப்பார் என்பதல்ல. இது ஒரு நல்ல பேட்டிங் ஆகும். மிடில் ஓவர்களில் அடித்து நொறுக்க முடியும் என்பது எங்களிடம் உள்ள நம்பிக்கையாகும்.

பிராவோவை முன்னால் இறக்கும் திட்டம் எதுவும் இல்லை. ராயுடு எங்கள் முக்கிய பேட்ஸ்மேன். எனவே நடு ஓவர்களில் அடிக்க ஆளிருந்தது. அனைத்து வெற்றிகளுமே சிறப்பு வாய்ந்ததுதான், இதில் எது சிறந்தது, பிடித்தது என்று தேர்வு செய்வது கடினம்.

நிறைய பேர் எண்கள், புள்ளிவிவரங்களைப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் இன்றைய தேதி 27, என் ஜெர்சி எண் 7, இது எங்களுடைய 7வது பைனல். வயது பற்றி நிறைய பேசியாகிவிட்டது, ஆனால் உடல்தகுதிதான் முக்கியம். ராயுடுவுக்கு 33 வயது என்பது ஒரு பிரச்சினையல்ல. எந்த கேப்டன்களை நீங்கள் கேட்டாலும் களத்தில் நன்றாக நகர்ந்து இயங்கும் பீல்டர்களையே விரும்புவார்கள். இதற்கு வயது ஒரு தடையல்ல 19-20 வயதாக இருந்தாலும் 30 வயதாக இருந்தாலும்.

ஆனாலும் எங்களுடைய பலவீனங்கள் எங்களுக்கு நன்றாகவே தெரியும், வாட்சன் டைவ் அடித்தால் காயமடைவார், அதனால் அவர் அதைச் செய்ய வேண்டாம் என்றே விரும்புவோம். இவையெல்லாம் எங்களுக்குத் தெரிந்ததுதான், வயது என்பது ஒரு எண் மட்டுமே. ஆனால் உடற்தகுதியில் ஃபிட் ஆக இருக்க வேண்டும். இப்போதைக்கு எந்த ஒரு திட்டமும் இல்லை. சென்னைக்குச் செல்கிறோம். முடிவு என்னவாக இருந்திருந்தாலும் சென்னைக்குச் சென்று ரசிகர்களையும் அணிக்கு நெருக்கமானவர்களையும் சந்திக்க வேண்டும். விடுதி ஒன்றில் அனைவரும் ஒன்றிணைந்து மாலைப்பொழுதை மகிழ்ச்சியுடன் கழிக்கவிருக்கிறோம்.

இவ்வாறு கூறினார் தோனி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

51 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

மேலும்