சேவாக், சச்சின் இருந்தும் 1,000 பார்வையாளர்களே இருந்தனர்: கம்பீர் வேதனை

By செய்திப்பிரிவு

டெஸ்ட் கிரிக்கெட்டை பிசிசிஐ சரியாக மார்க்கெட் செய்வதில்லை இதனால் டெஸ்ட் கிரிக்கெட் வலுவிழந்து வருகிறது என்று கவுதம் கம்பீர் வேதனை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவது சிகப்பு டியூக் பந்துகளில் அதற்கு முன்பாக மட்டைப் பிட்ச்களில் வெள்ளைப் பந்தில் அங்கு ஒருநாள், டி20 போட்டிகளில் ஆடுவதில் பயனில்லை என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

“ரெட் ட்யூக் பந்துகளில் ஆடுவது வேறு, வெள்ளைப் பந்தில் குறைந்த ஓவர் போட்டிகளில் ஆடுவது வேறு. அங்கு ஆடும் 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் ஆடுவது டெஸ்ட் போட்டிக்கான தயாரிப்பின் அறிகுறியாகாது.

பிசிசிஐ குறைந்த ஓவர் போட்டிகளில் கவனத்தைக் குறைத்துக் கொண்டு டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

பிசிசிஐ டெஸ்ட் கிரிக்கெட்டை ஒருநாள், டி20 போன்று மார்க்கெட் செய்வதில்லை. ஈடன் கார்டன்சில் ஒரு டெஸ்ட் போட்டி எனக்கு நினைவிருக்கிறது. மே.இ.தீவுகளுக்கு எதிராக. முதல் நாளில் இந்தியா பேட் செய்கிறது. மைதானத்தில் 1000 பார்க்வையாளர்களே இருந்தனர்.

இத்தனைக்கும் சேவாக், சச்சின், லஷ்மண் விளையாடுகின்றனர், முதல் நாள், ஆனால் 1000 பேர்களே இருந்தனர்” என்றார் கம்பீர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

சினிமா

18 mins ago

சினிமா

27 mins ago

சினிமா

30 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

28 mins ago

சினிமா

46 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

40 mins ago

சினிமா

51 mins ago

சினிமா

54 mins ago

வலைஞர் பக்கம்

58 mins ago

மேலும்