கோலாகலமாகத் தொடங்கியது குளிர்கால ஒலிம்பிக் போட்டி

By செய்திப்பிரிவு

23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமான தொடக்க விழாவுடன் தென் கொரியாவின் பியாங்சங் நகரில் நேற்று தொடங்கியது.

இந்த குளிர்கால ஒலிம்பிக் திருவிழாவில் 92 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். வரும் 25-ம் தேதி வரை நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் திருவிழாவில் இந்தியாவில் இருந்து லூஜ் போட்டியில் ஷிவா கேசவனும், கிராஸ் கன்ட்ரி ஸ்கீயிங் போட்டியில் ஜெகதீஷ் சிங்கும் பங்கேற்கின்றனர். தொடக்க விழா நிகழ்ச்சிகள் நேற்று மாலை இந்திய நேரப்படி 4.30 மணி அளவில் நடைபெற்றன. முதலில் ஒவ்வொரு நாடுகளை சேர்ந்த வீரர்களும் வரிசையாக கொடி அணிவகுப்பு நடத்தினர். இதில் இந்திய வீரர் ஷிவா கேசவன் தேசிய கொடிணை ஏந்தியபடி அணிவகுப்பில் கலந்து கொண்டார்.

ஊக்க மருந்து தடை விவகாரத்தால் ரஷ்யா வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் கொடியின் கீழ் அணி வகுத்துச் சென்றனர். தென் கொரியா, வட கொரியா அணிகள் ஒருங்கிணைந்த ஒரே கொடியின் கீழ் அணி வகுத்துச் சென்றன. தொடக்க விழாவில் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் கலந்து கொண்டார். அவரை, தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் கைகுலுக்கி வரவேற்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மேலும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாஹ், ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் உள்ளிட்ட தலைவர்களும் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து தென் கொரிய நாட்டின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. இதையடுத்து குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கப்பட்டதற்கான முறைப்படியான அறிவிப்பை தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் அறிவித்தார். விழா மேடையில் உள்ள பெரிய ஒலிம்பிக் ஜோதியை தென் கொரியா முன்னாள் சாம்பியனான பிகர் ஸ்கேட்டர் வீரராங்கனை கிம் யு-நா ஏற்றினார். மைனஸ் 10 வெப்ப நிலையில் நடைபெற்ற இந்த தொடக்க விழாவை பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் நேரில் கண்டுகளித்தனர்.

உறைபனியிலும் டோங்கா நாட்டு வீரரான பிடா டபுஃப்டோபுவா மேல் சட்டை அணியாமல் கொடி அணி வகுப்பில் கலந்து கொண்டது அனைவரையும் கவர்ந்தது. கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியிலும் பிடா டபுஃப்டோபுவா மேல் சட்டை அணியாத நிலையில் உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக்கொண்டபடி பங்கேற்றிருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

விளையாட்டு

24 mins ago

வணிகம்

36 mins ago

இந்தியா

38 mins ago

சினிமா

44 mins ago

ஓடிடி களம்

1 hour ago

கல்வி

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

மேலும்