டி20 வரலாற்றில் 2-வது அதிவேக சதம்; ரிஷப் பந்த் புதிய சாதனை

By பிடிஐ

டெல்லியில் சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காக ஆடிவரும் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் ரிஷப் பந்த் 32 பந்துகளில் சதம் கண்டு புதிய இந்திய டி20 சாதனையைப் படைத்ததோடு டி20 வரலாற்றில் 2-வது அதிவேக சதமெடுத்தார் ரிஷப் பந்த்.

இதன் மூலம் இமாச்சலப் பிரதேச அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வீழ்த்தியது. கிறிஸ் கெய்ல் 30 பந்துகளில் சதமெடுத்ததே டி20 வரலாற்றில் அதிவேக சதமாக உள்ளது. ரிஷப் பந்த் இந்தப் போட்டியில் 38 பந்துகளில் 116 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

145 ரன்கள் வெற்றி இலக்கை 8.2 ஓவர்கள் மீதம் வைத்து டெல்லி அணி வெற்றி பெற்றது. பந்த் தன் இன்னிங்ஸில் 12 சிக்சர்கள் 8 பவுண்டரிகள் விளாசினார்.

2018 ஐபிஎல் சீசனுக்கு டெல்லி டேர் டெவில்ஸ் தக்க வைத்த வீரர்களில் ரிஷப் பந்த் ஒருவர். முன்னதாக டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்த டெல்லி அணி, இமாச்சல அணியை 150 ரன்களுக்குள் மட்டுப்படுத்தியது. கேப்டன் பிரதீப் சங்வான் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இமாச்சல அணி 78/5 என்ற நிலையிலிருந்து ஓரளவுக்கு மீளக் காரணம் நிகில் கங்க்டா என்ற வீரர், இவர் 27 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். ரிஷி தவணுடன் இணைந்து 47 ரன்களை இருவரும் சேர்க்க, ரிஷி தவண் 16 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 mins ago

இந்தியா

16 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

45 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

வணிகம்

10 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

கல்வி

2 hours ago

மேலும்