விம்பிள்டன் இறுதிச்சுற்றில் பெட்ரா விட்டோவா

By செய்திப்பிரிவு

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் செக்.குடியரசின் பெட்ரா விட்டோவா இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

லண்டனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் பெட்ரா விட்டோவா 7-6 (6), 6-1 என்ற நேர் செட்களில் சகநாட்டு வீராங்கனையான லூஸி சபரோவாவை தோற்கடித்தார். 2011 விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற விட்டோவா, 2-வது முறையாக விம்பிள்டனில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-செக்.குடியரசின் ரடேக் ஸ்டெபானெக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்த ஜோடி வியாழக்கிழமை நடைபெற்ற காலிறுதியில் 3-6, 7-6 (5), 6-3 என்ற செட் கணக்கில் கனடாவின் டேனியல் நெஸ்டர்-செர்பியாவின் நீனாட் ஜிமோன்ஜிக் ஜோடியைத் தோற்கடித்தது.

சானியா ஜோடி முன்னேற்றம்

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா-ருமேனியாவின் ஹாரியா டீக்கா ஜோடி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த ஜோடி 6-3, 6-3 என்ற நேர் செட்களில் குரேஷியாவின் மேட் பேவிக்-செர்பியாவின் போஜன ஜோவ்நோவ்ஸ்கி ஜோடியைத் தோற்கடித்தது.

மற்றொரு கலப்பு இரட்டையர் 2-வது சுற்றில் இந்தியாவின் போபண்ணா-செக்.குடியரசின் ஆன்ட்ரியா லவகோவா ஜோடி தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது.

ரோஜர் ஃபெடரர் வெற்றி

புதன்கிழமை இரவு நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 3-6, 7-6 (5), 6-4, 6-4 என்ற செட் கணக்கில் சகநாட்டவரான ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்காவைத் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

4 hours ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

க்ரைம்

6 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

க்ரைம்

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்