யு.எஸ்.ஏ அணியை 22 கோல்கள் அடித்து துவம்சம் செய்த இந்திய ஜூனியர் ஹாக்கி அணி

By பிடிஐ

சுல்தான் ஆஃப் ஜோஹார் கோப்பைக்கான ஜூனியர் ஹாக்கிப் போட்டியில் இந்திய ஜூனியர் அணி யு.எஸ்.ஏ. அணியை 22-0 என்ற கோல்கணக்கில் துவம்சம் செய்து தங்களது 3-வது வெற்றியைப் பதிவு செய்தது.

ஜோஹார் பாஹ்ருவில் நடைபெறும் இந்த ஹாக்கி தொடரில் அமெரிக்க ஜூனியர் அணி கோல் மழையைத் தடுக்க முடியாமல் திணறியது.

10 வீர்ர்கள் சேர்ந்து 22 கோல்களைத் திணித்தனர். இந்த வெற்று மூலம் 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது இந்திய ஜூனியர் அணி.

ஜூனியர் வீரர் ஹர்மஞ்ஜித் சிங் 25, 26, 40, 45, 52 ஆகிய நிமிடங்களில் 5 கோல்களை அடிக்க, அபிஷேக் 28, 37, 38, 46 ஆகிய நிமிடங்களில் 4 கோல்களை அடித்தார். விஷால் ஆன்ட்டில், தில்பிரீத் சிங் ஆகியோர் தலா 3 கோல்களையும், மனிந்தர் சிங் 2 கோல்களையும், பிரதாப் லாக்ரா, ரவிச்சந்திர மொய்ராங்தம், ரவ்ஷன் குமார், ஷைலானந்த் லக்ரா, விவேக் பிரசாத் ஆகியோர் தலா 1 கோலையும் அடிக்க கோல் மழையில் மூழ்கியது அமெரிக்க ஜூனியர் ஹாக்கி அணி.

இந்தப் போட்டிக்கு முன்னதாக தங்களது முந்தைய 2 ஆட்டங்களில் மொத்தமாக 30 கோல்களை வாங்கியிருந்தது அமெரிக்க அணி. ஆஸ்திரேலிய அணியிடம் 19 கோல்களையும் இங்கிலாந்திடம் 11 கோல்களையும் வாங்கியிருந்தது அமெரிக்கா.

இந்த ஆட்டத்தின் உத்வேகத்தை கடினமான எதிரணிகளான ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகியவற்றுக்கு எதிராக இந்திய அணி எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்திய அணி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

30 mins ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வேலை வாய்ப்பு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்