புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் குவிந்து பெருமாளை வழிபட்டனர்.
புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நேற்று அதிகம் காணப்பட்டது. உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வர்களும் வந்திருந்தனர்.
இதே போல் வைகுண்ட பெருமாள் கோயில், உலகளந்த பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
காஞ்சிபுரம் அருகே உள்ள கூழமந்தல் பேசும் பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து சிறப்புஅலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறுபெருமாள் கோயில்களில் பக்தர்கள் அதிக எண்ணிக்கை யில் வந்திருந்தனர். சில இடங்க ளில் பஜனை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.