காரைக்கால் கைலாசநாதர் கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

By வீ.தமிழன்பன்

காரைக்காலில் உள்ள சுந்தராம்பிகை சமேத கைலாசநாதர் கோயிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா சிறப்பான வகையில் நடத்தப்பட்டு வருகிறது. கரோனா தொற்றுப் பரவல் காரணமாகக் கடந்த ஆண்டு விழா நடத்தப்படவில்லை.

நிகழாண்டு விழா இன்று (மார்ச் 19) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி, காலை பஞ்சமூர்த்திகள், அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து, கொடி பெரிய வீதியுலா நடைபெற்றது. கொடிக் கம்பத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. பின்னர், சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

நிகழ்ச்சியில் நிர்வாக அதிகாரி (கோயில்கள்) எம்.காசிநாதன், கைலாசநாத சுவாமி நித்யகல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தான அறங்காவல் குழுத் தலைவர் ஆர்.ஏ.ஆர்.கேசவன், துணைத் தலைவர் பி.ஏ.டி.ஆறுமுகம், செயலாளர் எம்.பக்கிரிசாமி, பொருளாளர் டி.ரஞ்சன் கார்த்திகேயன், உறுப்பினர் கே. பிரகாஷ், உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து நாள்தோறும் மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெறும். முக்கிய நிகழ்வுகளான தேரோட்டம் மார்ச் 27-ம் தேதி, 30-ம் தேதி காரைக்கால் அம்மையார் ஐக்கிய விழா, 31-ம் தேதி தெப்போற்சவம் நடைபெறவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

50 mins ago

இந்தியா

3 hours ago

வலைஞர் பக்கம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்