கார்த்திகைச் செவ்வாயில் முருக தரிசனம்

By செய்திப்பிரிவு

வி.ராம்ஜி


கார்த்திகைச் செவ்வாய்க்கிழமையில், முருக வழிபாடு செய்வது எண்ணற்ற பலன்களைத் தரும்.


பொதுவாகவே, செவ்வாய்க்கிழமை என்பது முருகப்பெருமானுக்கு உரிய நாள். எனவே செவ்வாய்க்கிழமையில், அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று வழிபடுவது நம் வழக்கம். மேலும் சஷ்டியைப் போலவே, கார்த்திகை விரதம் போல செவ்வாய்க்கிழமை தோறும் விரதம் மேற்கொண்டு முருக வழிபாடு செய்யும் பக்தர்களும் இருக்கிறார்கள்.


கந்த சஷ்டி கவசம் முதலான முருகனைப் போற்றும் பாடல்களையும் ஸ்லோகங்களையும் பாராயணம் செய்து, முருகனுக்கு சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து பூஜித்து வேண்டிக் கொள்வார்கள்.


செவ்வாய்க்கிழமை விசேஷம் எனில், கார்த்திகை மாத செவ்வாய்க்கிழமையும் ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. கார்த்திகைச் செவ்வாய்க்கிழமையான இன்று மாலையில் அருகில் உள்ள முருகப்பெருமான் கோயிலுக்குச் செல்லுங்கள். முருகனுக்கு செவ்வரளிப் பூக்கள் சார்த்தி வழிபடுங்கள். முடிந்தால், சர்க்கரைப் பொங்கல் அல்லது எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து வழிபடுங்கள்.


எதிர்ப்புகள் அனைத்தும் விலகும். வீடு மனை வாங்குவதில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். வீட்டில் சுபிட்சம் நிலவும். உத்தியோகம், வியாபாரம் சம்பந்தமான விஷயங்களில் உயர்வு கிடைப்பது உறுதி.


கார்த்திகைச் செவ்வாயில், கந்தகுமாரனை வணங்கி வழிபடுங்கள். வளமும் நலமும் பெறுவீர்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

15 mins ago

சினிமா

24 mins ago

சினிமா

27 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

25 mins ago

சினிமா

43 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

37 mins ago

சினிமா

48 mins ago

சினிமா

51 mins ago

வலைஞர் பக்கம்

55 mins ago

சினிமா

1 hour ago

மேலும்