மகாளய பட்சத்தில் தினமும் தர்ப்பணம்; தினமும் தானம்! 

By செய்திப்பிரிவு

வி.ராம்ஜி


பட்சம் என்றால் பதினைந்து நாட்கள். மகாளய பட்சமான இந்தக் காலத்தில், பித்ருக்கள் என்று சொல்லப்படும் முன்னோர்கள், இந்தப் பதினைந்து நாட்களும் சூட்சும ரூபமாக நம் வீட்டுக்கு வந்து நம்முடனேயே இருப்பார்கள். நம்மை ஆசீர்வதிப்பார்கள் என்பது ஐதீகம்.


அதனால்தான், மகாளய பட்ச காலத்தில், முன்னோர்களை நினைத்து, தினமும் தர்ப்பணம் செய்யவேண்டும் என்றும் ஒவ்வொருநாளும் முன்னோர்களை நினைத்து, உடை, குடை, செருப்பு, பாத்திரங்கள் என தானம் செய்யவேண்டும் என வலியுறுத்துகிறது சாஸ்திரம்.
பித்ருக்கள் வழிபாட்டுக்கு உரியவர்கள். அவர்களை நாம் வணங்காதிருந்தால், அவமதித்ததாகிவிடும். இதுவே பித்ரு தோஷம் என்று சொல்லப்படுகிறது. நம் அப்பாவோ, தாத்தாவோ, சித்தப்பாவோ... நம் வம்சத்தில் யாரோ ஒருவர் பித்ருக்களை வணங்காமல் இருந்திருந்தால் கூட, அவையெல்லாம் நமக்கும் பாவங்களாக வந்தடையும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.


குடும்பத்தில் காசு பணம் இல்லாத நிலை, காசு பணம் இருந்தும் குடும்பத்தில் ஒற்றுமை இல்லாத சூழல், ஒற்றுமை இருந்தும் நிம்மதி இல்லாத வாழ்க்கை, முக்கியமாக, வாரிசு இல்லாத துக்கம், வாரிசு இருந்தாலும் உடல்நலக்குறைபாடு, உடல் குறைபாடு என இருப்பது என பித்ரு தோஷம் தரும் பாதிப்புகளைச் சொல்லுகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.


தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட திதி கொடுப்பதற்கு மிகவும் சிறந்தது மகாளய அமாவாசை. வருடத்தில் மற்ற மாதங்களில் வரும் அமாவாசையன்று முன்னோரை நினைத்து வழிபாடு செய்வோம். ஆனால், மகாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை உள்ள காலத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டும். அனைத்து முன்னோர்களையும் அப்போது வணங்கி வழிபடவேண்டும். காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு போல் மற்ற அமாவாசைகள். முழு ஆண்டுத்தேர்வுக்கு நிகரானது புரட்டாசி அமாவாசை.


இந்தநாளில், புனித நீர் நிலைகளுக்குச் சென்று புனித நீராடி, நம் முன்னோரைப் பிரார்த்தித்து தர்ப்பணம் செய்வது நல்லது. இது நமக்கு மட்டும் அல்ல... நம் சந்ததியினருக்கும் சத்தான வாழ்க்கையையும் வளத்தையும் கொடுக்கும் என்பது உறுதி!


மகாளய பட்ச காலத்தில், தினமும் பித்ருக்களை ஆராதியுங்கள். அவர்களுக்கு அன்னம் படைத்து நைவேத்தியம் செய்யுங்கள். தினமும் காகத்துக்கு அன்னமிடுங்கள். உங்களால் முடிந்த அளவு, உணவுப் பொட்டலம் வழங்குங்கள். போர்வை, ஆடை, குடை, செருப்பு, பாத்திரங்கள் (செம்புப் பாத்திரங்கள்) என ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருக்கு வழங்குங்கள்.


உங்கள் வம்சம், வாழையடி வாழையென செழிக்கும்; சிறக்கும்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்