மகத்தன்று நீராட வேண்டிய சமுத்திர ஸ்தலம் எது?

மாசி மாதத்துக்குரிய தெய்வம் மாதவர். மக நட்சத்திரம் பெருமாளுக்கும் உகந்த நாள். மாசி மகத்தில் நீர் நிலை உள்ள இடங்களில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

• தீர்த்தவாரிக்குச் சிறப்பு பெற்ற 108 திவ்யதேசங்களில் ஒன்று மகாபலிபுரம். இங்கு மாசி மகத்தன்று நீராடுவது ராமேஸ்வரத்தில் நீராடிய பலனைத் தரும்.

• பெருமாள் இங்கு ஞானப்பிரான் - வலவெந்தை என அழைக்கப்படு கிறார். இக்கோயிலிலுள்ள இறைவர் உலகுய்ய நின்ற பெருமாள் எனவும் இறைவி நிலமங்கை நாச்சியார் எனவும் இங்குள்ள கல்வெட்டுக்கள் கூறுகின்றன.

• உலகுய்ய நின்ற பெருமாள் என்பது நிற்கும் தோற்றத்திலுள்ள விஷ்ணு பெருமானையே குறிக்கும். எனினும் இங்கு கருவறையில் உள்ள இறைவர் படுத்த நிலையிலிருக்கும் திருமாலாகவே காணப்படுகிறார். அவர் பெயரும் தல சயனப் பெருமாள் (தரை கிடந்த பெருமாள்) என வழங்கிவருகிறது.

• இங்கு ஆரம்பத்தில் இருந்த மூலவருக்குப் பதிலாகப் பிற்காலத்தில் பள்ளிகொண்ட பெருமாள் சிலை வைக்கப்பட்டதாகச் சிலர் கருதுகிறார்கள்.

• திருமங்கையாழ்வார் எழுதிய பாசுரம் ஒன்றில் மாமல்லபுரத்துக் கோயிலொன்று குறித்து வரும் திருக்கடல்மல்லை தலசயனம் என்பது இக்கோயிலையே குறிக்கிறது என்பது பலரது கருத்து.

• மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில் (திருக்கடல்மல்லை) 108 திவ்ய தேசங்களுள் ஒன்று.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

இந்தியா

13 mins ago

இந்தியா

25 mins ago

இந்தியா

35 mins ago

இந்தியா

43 mins ago

சுற்றுச்சூழல்

53 mins ago

இந்தியா

56 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

48 mins ago

விளையாட்டு

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்