வார ராசிபலன் 15-1-2015 முதல் 21-1-2015 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

By சந்திரசேகர பாரதி

மேஷம்

உங்கள் ராசிக்குச் சூரியன், செவ்வாய், புதன், ராகு ஆகியோர் சாதகமான நிலையில் உலவுவதால் பெரியவர்கள், மேலதிகாரிகள், முக்கியஸ்தர்கள் ஆகியோரது ஆதரவைப் பெறுவீர்கள். எதிர்ப்புகளைச் சமாளிக்கும் சக்தி இருக்கும்.பயணத்தால் அனுகூலம் உண்டாகும். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகத்திறமையாலும் செயல் வேகத்தாலும் ஓரிரு சாதனைகள் செய்வீர்கள். வியாபாரத்தில் அபிவிருத்தி காண வழிபிறக்கும். 8-ல் சனி இருப்பதால் அதிகம் பாடுபட வேண்டி வரும். உடல் அசைதி ஏற்படும். வாரப் பின்பகுதி முன்பகுதியைவிடச் சிறப்பாக இருக்கும். முக்கியமான காரியங்கள் நிறைவேறச் சந்தர்ப்பம் கூடிவரும். பதவிகளும் பொறுப்புகளும் கிடைக்கும். சொத்துகளையும், பொருட்களையும் வாங்க வாய்ப்புக் கூடிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 18, 20.

திசைகள்: தென்மேற்கு, தெற்கு, கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: ஆரஞ்சு, புகை நிறம், பச்சை, சிவப்பு.

எண்கள்: 1, 4, 5, 9.

பரிகாரம்: சனிப் பிரீதி செய்வது நல்லது. மாற்றுத் திறனாளிகளுக்கு உதவவும்.



ரிஷபம்

உங்கள் ராசிக்கு அதிபதி சுக்கிரன் 9-மிடத்தில் உலவுகிறார். செவ்வாய், கேது ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் எதிர்ப்புகளைச் சமாளிக்கும் சக்தியைப் பெறுவீர்கள். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு கூடும். பெண்களுக்கு உற்சாகம் பெருகும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். பழைய நண்பர்களின் தொடர்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும். வாரக் கடைசியில் தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். மக்களால் நலம் உண்டாகும். தந்தையாலும் தந்தை வழி உறவினர்களாலும் ஓரிரு எண்ணங்கள் ஈடேறும். தொழிலில் நல்லதொரு மாற்றம் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 16, 20 (பிற்பகல்).

திசைகள்: வடமேற்கு, தெற்கு, வடக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: மெரூன், வெண்மை, இளநீலம், பச்சை.

எண்கள்: 5, 6,, 7, 9.

பரிகாரம்: ராகுவுக்குப் பிரீதியாக நாக பூஜை செய்யவும். துர்கை அம்மனை வழிபடவும்.



மிதுனம்

உங்கள் ராசிக்குப் புதன், குரு, சுக்கிரன், சனி, கேது ஆகியோர் அனுகூலமான நிலையில் சஞ்சரிப்பதால் புத்திசாலித்தனம் கூடும். பொருள் வரவு அதிகரிக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டம் கூடிவரும். வியாபாரம் பெருகும்.கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைத்துவரும். ஆன்மிகவாதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோருக்கெல்லாம் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். 4-ல் ராகுவும் 8-ல் சூரியனும் இருப்பதால் உடல் நலனில் கவனம் தேவை. பெற்றோர் நலனிலும் அக்கறை செலுத்த வேண்டிவரும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 16, 18.

திசைகள்: வடமேற்கு, மேற்கு, வடக்கு, தென்கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: மெரூன், நீலம், பச்சை, பொன் நிறம்.

எண்கள்: 3, 5, 6, 7, 8.

பரிகாரம்: துர்கைக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.



கடகம்

உங்கள் ராசிக்கு 3-ல் ராகு உலவுவது சிறப்பாகும். இதர கிரகங்கள் சிறப்பாக உலவாததால் எதிலும் விசேடமான நன்மைகளைப் பெற இயலாது. அலைச்சல் கூடும். மனத்தில் சலனம் ஏற்படும். மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும். எக்காரியத்திலும் அவசரப்படாமல் நிதானமாக ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடுவது அவசியமாகும். உடன்பிறந்தவர்களுக்கும் உங்களுக்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வியாபாரம், கணிதம், எழுத்து, கலை சம்பந்தப்பட்ட இனங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் கடமைகளைச் சரிவர ஆற்றி வருவது நல்லது. இயந்திரப் பணியாளர்களுக்கும், பொறியாளர்களுக்கும் சோதனையான நேரமிது. கணவன் மனைவி உறவு நிலை சீராக இராது. கூட்டுத் தொழிலில் கவனம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 16, 18.

திசைகள்: தென்மேற்கு.

நிறங்கள்: புகை நிறம், கறுப்பு

எண்: 4.

பரிகாரம்: நவக்கிரக வழிபாடு அவசியமாகும். நவக்கிரக ஹோமம் செய்வது நல்லது. ஹோமம் நடக்கும் இடங்களில் சென்று கலந்து கொள்ளலாம்.



சிம்மம்

உங்கள் ராசிக்கு 6-ல் சூரியனும் புதனும் 12-ல் வக்கிர குருவும் உலவுவதால் நல்ல தகவல் வந்து சேரும். மேலதிகாரிகள் உங்களைப் பாராட்டுவார்கள். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவற்றைப் பெறச் சந்தர்ப்பம் கூடிவரும். நிறுவன, நிர்வாகத் துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். 2-ல் ராகுவும் 4-ல் சனியும், 6-ல் சுக்கிரனும் 7-ல் செவ்வாயும் 8-ல் கேதுவும் இருப்பதால் குடும்பத்தில் சலசலப்புகள் ஏற்படும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் அதிகமாகும். கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் பிரச்சினைகள் உண்டாகும். தொழில் ரீதியாக இடமாற்றம் சிலருக்கு ஏற்படும். மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறை செலுத்துவது அவசியமாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 16, 18.

திசைகள்: வடக்கு, கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: பச்சை, ஆரஞ்சு, பொன் நிறம். , .

எண்கள்: 1, 3, 5.

பரிகாரம்: ராகு, கேது, சுக்கிரன், சனி ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது.



கன்னி

உங்கள் ராசிக்கு 3-ல் சனியும் 5-ல் சுக்கிரனும் 6-ல் செவ்வாயும் 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். புதிய சொத்துகள் சேரும். தொழிலாளர்களது நிலை உயரும். விவசாயிகளுக்கு மகசூல் கூடும், வருவாய் அதிகரிக்கும். கலைஞர்கள் சுபிட்சம் காண வாய்ப்பு அமையும். மகப்பேறு பாக்கியம் உண்டாகும். மக்களால் எதிர்பார்த்திருந்த காரியங்கள் நிறைவேறும். ரேடியோ, வீடியோ, டி.வி., பத்திரிகை போன்ற தகவல் தொடர்பு இனங்கள் ஆக்கம் தரும். நிலம், மனை, வீடு, வாகனங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ,ஜனவரி 16, 18.

திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, மேற்கு, தெற்கு, வடகிழக்கு.

நிறங்கள்: வெண்மை, நீலம், பச்சை, சிவப்பு, பொன் நிறம்..

எண்கள்: 3, 5, 6, 8, 9.

பரிகாரம்: ராகு, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்து கொள்ளவும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

இந்தியா

29 mins ago

இந்தியா

21 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்