சுபிட்சம் தரும் குருவார பிரதோஷம் இன்று!

By வி. ராம்ஜி

சித்திரை மாதத்தின் குருவாரத்தில், அதாவது வியாழக்கிழமையில் பிரதோஷ பூஜையை கண்ணாரத் தரிசியுங்கள். குடும்பத்தில் எல்லா நல்லவிஷயங்களும் நடந்தேறும். தடைப்பட்ட அனைத்து காரியங்களும் அமோகமாக நடைபெறும். இனிமையாகவும் குதூகலத்துடனும் வாழ்வீர்கள். இன்று வியாழக்கிழமை 2.5.19 பிரதோஷம்.

நலமும் வளமும் தரும் சித்திரை மாதத்தில், பிரதோஷ பூஜையை தரிசிப்பதும் அப்போது சிவனாரை மனமொன்றிப் பிரார்த்தனை செய்வதும் ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. மிகுந்த நன்மைகளை வாரிவழங்கக் கூடியது என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

குறிப்பாக, சித்திரை மாதத்தில், குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில் பிரதோஷம் வருவது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது.

 இந்த நாளில், மாலைவேளையில், அருகில் உள்ள சிவாலயத்திற்குச் செல்லுங்கள். நந்திதேவர், சிவபெருமான், குருவாரம் என்பதால் நவக்கிரகத்தில் உள்ள குரு பகவான், கோஷ்டத்தில் உள்ள குரு தட்சிணாமூர்த்தி முதலானோரை கண்ணாரத் தரிசியுங்கள். மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள்.

மாலை 4.30 முதல் 6 மணி வரை என்பது பிரதோஷ நேரம். இந்த சமயத்தில், சிவாலயத்தில் உள்ள நந்திதேவருக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெறும். முடிந்தால், சந்தனம், பால், தயிர், திரவியப் பொடி, பன்னீர், தேன் முதலான அபிஷேகப் பொருட்களை வழங்கி தரிசியுங்கள்.

அதேபோல், செவ்வரளி, வில்வம், அருகம்புல் கொண்டு நந்திதேவருக்குச் சார்த்தி வேண்டிக் கொள்ளுங்கள்.

குருவார பிரதோஷத்தில் மறக்காமல் தரிசனம் செய்யுங்கள். அபிஷேகப் பொருட்களும் பூக்களும் வழங்குங்கள். இன்னும் முடிந்தால், தயிர்சாதம் வழங்குங்கள். உங்கள் வாழ்க்கையையே குளிரச் செய்துவிடுவார் ஈசன்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

12 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

சுற்றுலா

5 hours ago

கல்வி

4 hours ago

மேலும்