வார ராசிபலன் டிசம்பர் 13 முதல் 19 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

By பெருங்குளம் ராமகிருஷ்ணன்

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடியும்.உங்கள் மீது மற்றவர்களுக்கிருந்த கோபம் குறையும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துச் செல்ல வேண்டும். உத்தியோகத்தில் அவசரப்படாமல் நிதானமாகப் பணிகளைக் கவனிக்க வேண்டும். குடும்பாதிபதி சுக்கிரன் ஆட்சி பெற்றிருப்பது பலம் என்பதால் குடும்பத்தில் இருந்த மனவருத்தங்கள் அகலும்.

பிள்ளைகள் முன்னேற்றத்தில் இருந்த தடை தாமதம் நீங்கும். பெண்களுக்கு, கோபத்தைக் குறைப்பது நன்மை தரும். கலைத் துறையினருக்கு இடைத்தரகர்களை எதிர்பாராமல் நீங்களே நேரடியாக முயற்சி செய்யுங்கள். அரசியல்வாதிகளுக்கு, உங்களுக்குச் சில சோதனைகள் நேரும். திடமனத்துடன்இருந்தால் மேலிடத்திடம் நன்மதிப்பையும் கனிவையும் பெறுவீர்கள்.  மாணவர்களுக்கு,கல்வியில் முன்னேற்றமடைய கவனமுடன் படிப்பது நல்லது. எதிலும் நிதானம் தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: ஆரஞ்சு, நீலம்

எண்கள்: 5, 7, 8

பரிகாரம்: குன்றின் மேல் இருக்கும் குமரனை கந்த சஷ்டி கவசம் சொல்லி வணங்க வேண்டும்.

 

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியைப் பார்க்கும் சூரியன், குருவால் பலவித நன்மைகள் ஏற்படும். நண்பர்கள்,உறவினர்களிடம் வீண் மனஸ்தாபங்கள் அகலும். நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று எண்ணிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆனாலும் அஷ்டமத்துச் சனி நடப்பதால் அவசரம் காண்பிப்பதைத் தவிர்க்க வேண்டும். தொழில், வியாபாரம் தொடர்பானகுழப்பங்கள் நீங்கும். உத்தியோகத்தில் திட்டமிட்டு காரியங்களைச் செய்தால் வெற்றி கிடைக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளுக்காகப் பாடுபடுவீர்கள். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். பெண்களுக்கு நிதானம் தேவை. பொருள் சேர்க்கை உண்டாகும். கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் எளிதில் கிடைக்கக் கூடிய காலகட்டம். அரசியல்வாதிகளுக்கு,  உங்கள் மன உறுதியும், விசுவாசமும் உங்களுக்குப் பொறுப்பான பதவிகளைப் பெற்றுத்தரும். மாணவர்களுக்கு, திட்டமிட்டு பாடங்களைப் படிப்பது கல்வியில் வெற்றிக்கு உதவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, வெளிர்நீலம்

எண்கள்: 2, 6

பரிகாரம்:  மஹாலக்ஷ்மி அஷ்டகம் சொல்லி வணங்கி வருவது பொருளாதார நிலையை உயர்த்தும்.

 

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் மனக்கவலை அகலும். பணவரவு திருப்தி தரும். நண்பர்களால் உதவி கிடைக்கும்.ஆடம்பரச் செலவுகள் ஏற்படும். எதிர்மறையான எண்ணங்கள் மறையும். தொழில், வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். வியாபாரச் செலவுகள் அதிகரிக்கும்.உத்தியோகத்தில் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.  களைப்பு ஏற்படலாம். குடும்பத்தில் குழப்பம் நீங்கும். உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு உயரும்.

கணவன், மனைவிக்குள் சகஜநிலை நீடிக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். பெண்களுக்கு,வீண் மனக்கவலை உண்டாகும். கலைத் துறையினருக்கு முயற்சிகளைத் தொடர்வது அவசியம். அரசியல்வாதிகள் எதிலும் எப்போதும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய காலகட்டம் இது.சமூகத்தில் அந்தஸ்தான பதவிகள் கிடைக்கும்.  மாணவர்களுக்கு, உயர்கல்வி பற்றிய கவலை நீங்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன்

திசைகள்: மேற்கு, வடகிழக்கு

நிறங்கள்: பச்சை, மஞ்சள்

எண்கள்: 3, 5

பரிகாரம்: பெருமாளைச் சேவித்து வர மனகுழப்பம் நீங்கும். செல்வ நிலை உயரும்.

 

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் இருக்கும் ராகுவாலும் ராசியைப் பார்க்கும் குருவாலும் எல்லா முயற்சிகளும், காரியங்களும் சாதகமான பலன் தரும். பணவரவு அதிகரிக்கும். கடினமான வேலைகளையும் எளிதாகச் செய்து முடிக்கும் திறமை உண்டாகும்.  தயக்கம், பயம் நீங்கும்.வெளியூர், வெளிநாட்டுப் பயணங்கள் செல்ல எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். தொழில்,வியாபாரம் முன்னேற்றமடையும். லாபம் அதிகரிக்கும். தேவையான பண உதவி கிடைக்கும்.உத்தியோகத்தில் பதவி உயர்வும் கூடுதல் பொறுப்புகளும் கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சுப காரியங்கள் நடக்கலாம்.சகோதரர்களால் உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும்.குழந்தைகளால்  பெருமை கிடைக்கும். பெண்களுக்கு,எந்த  வேலையையும் எளிதாக செய்து விடுவீர்கள். கலைத் றையினருக்கு சக கலைஞர்களைப் பகைத்துக் கொள்ளாமல் சுமுகமாகப் பழகி வருவது அவசியம். அரசியல்வாதிகளுக்கு, பொறுப்புகளைத் திறம்பட நிறைவேற்றுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மை தரும். திறமை வெளிப்படும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன்

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, வெளிர்பச்சை

எண்கள்: 2, 5

பரிகாரம்: பிரத்தியங்கரா தேவியை வணங்கி வர எதிர்ப்புகள் விலகும். தைரியம் அதிகரிக்கும்.

 

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. காரியங்களில் தடை, தாமதம் ஆகாமல்திட்டமிட்டுச் செய்வது நன்மை தரும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தொழில்,வியாபாரத்தில் மந்தநிலை மாறும். பழைய பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துச் செல்ல வேண்டும். உத்தியோகத்தில் வீண் அலைச்சலும், வேலைப்பளுவும் ஏற்படலாம். குடும்பத்தில் அனுசரித்துச் செல்ல வேண்டும்.  கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வது நன்மை தரும்.

பிள்ளைகளுக்காக அலைய வேண்டி இருக்கும்.குடும்பத்தினருக்காகக் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பெண்களுக்கு, மற்றவர்களின் பேச்சைக் கேட்டு எதிலும் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது. கலைத் துறையினருக்கு பல முன்னனி நிறுவனங்கள் தாமே உங்களைத் தேடி வந்து வாய்ப்பு கொடுக்கும். உங்கள் திறமைகள் முழுவதையும் வெளிப்படுத்தி ஆதரவைப் பெறுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, உங்கள் தன்னலமற்ற தொண்டுக்குப் பாரட்டுகள் குவியும். உங்கள் செல்வாக்கும் சொல்வாக்கும்  தனி மரியாதையைப் பெற்றுத் தரும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயத்தை விலக்கி விட்டு ஆர்வமாகப் படிப்பது வெற்றிக்கு உதவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

எண்கள்: 1, 3, 6

பரிகாரம்: முருகனை வணங்கி வர காரியத் தடைகள் நீங்கும்.குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

 

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் பணவரவு அதிகரிக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். நண்பர்களிடம்எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தைச் செய்து முடிப்பீர்கள்.அரசாங்கத்தால் நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடந்து முடியும். தொழில் வியாபாரத்துக்குத் தேவையான நிதியுதவி கிடைக்கும். புதிய வர்த்தக ஆர்டர்கள் கிடைப்பதில் சாதகமான நிலை காணப்படும். 

உத்தியோகத்தில் விருப்பமில்லாத இடமாற்றம் உண்டாகலாம்.குடும்பத்தில்  சண்டைகள் நீங்கும். கணவன், மனைவிக்குள் இடைவெளி குறையும். திருமணம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள்  கைகூடும். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.

பிள்ளைகள் மகிழ்ச்சியாகக் காணப்படுவார்கள். பெண்களுக்கு, எடுத்த காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். கலைத் துறையினருக்கு கடும்முயற்சியால் புதிய வாய்ப்புகள் வரும். போட்டிகள் இருக்கும். அரசியல்வாதிகளுக்கு, தேவையற்ற வீண் சோதனைகள் வரலாம். உங்களைப் பாராட்டியவர்களே இப்போது தரக்குறைவாகப் பேசலாம். மாணவர்களுக்கு,கல்வியில் இருந்த மந்தநிலை மாறும். சுறுசுறுப்பாகப் பாடங்களைப் படிப்பீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு

நிறங்கள்: பச்சை, மஞ்சள்

எண்கள்: 2, 3, 5

பரிகாரம்: நவக்கிரகங்களை வணங்கி வர எல்லா நலன்களும் உண்டாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

4 hours ago

உலகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

வேலை வாய்ப்பு

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

கல்வி

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்