நெட்டிசன் நோட்ஸ்: எஸ்பிபி மறைவு - மறைந்தது பாடும் நிலா

By செய்திப்பிரிவு

தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதியாகி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனளிக்காமல் இன்று (செப்டம்பர் 25) மதியம் 1:04 மணிக்கு காலமானார்.

அவருடைய மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Krithika Srinivasan

காலத்தில் நின்ற கலைஞர்களின் சாவு ஒரு போதும் சாதாரணமானதாக இருந்ததில்லை. வாழ்நாள் முழுவதும் பாடல்கள் பாடிக் களைத்த அந்தக் குரல்வளைகளில், சிகிச்சைக்கான குழாய்கள் புகுத்தி, பிளாஸ்திரிகள் ஒட்டப்பட்ட நிலையில் குரலற்ற ஜீவனாக இயற்கை எய்திய பாடகன் என்று எழுதியது இரக்கமற்ற நிசர்சனம். #SPB

ANANDH DFC

மூச்சு விடாமல் பாடியவரின் மூச்சு நின்றது.

பாடுவதை நிரந்தரமாக நிறுத்திய பாட்டுத் தலைவன்.

இனி ஒலித்தட்டில் மட்டுமே ஒலிக்கப்போகும் #எஸ்பிபி குரல்


MK Squad

*16 மொழிகளில் 40,000- க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.*
*6 முறை தேசிய விருது பெற்றவர் பாடகர் எஸ்பிபி*
*நந்தி விருது, ஃபிலிம்ஃபேர் விருது உள்ளிட்ட பல விருதுகளுக்குச் சொந்தக்காரர்*
*பதம்ஸ்ரீ, பத்ம பூஷண் போன்ற விருதுகளும் பெற்றுள்ளார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.


RIP SPB Sir

எஸ்பிபி போல ஒரு இனி பாடகர் பிறக்கப் போவதில்லை !


ஸ்ரீ

தான் இறந்து கொண்டிருக்கிறோம் என்று தெரிந்தும் கூட ஒரு மனிதனால் தம்ஸ் அப் காட்ட முடிகிறது என்றால் அவர்தான் எஸ்பிபி... அதுதான் பாஸிட்டிவிட்டி...

உங்களுடைய இதயத்தை நிறுத்திக்கொண்டு எங்களுடைய இதயத்துடிப்பை அதிகப்படுத்தி விட்டீர்கள்!!!


மழைச்சாரல்

எஸ்பிபி சார் பாடல்களைத் தொடர்ந்து டிவியில் ஒலிக்க வைக்கிறாங்க.. கேட்கும் போதெல்லாம் அழுகை வருது..
சிறுவயது முதல் கேட்டுக் கேட்டு வளர்ந்த குரலுக்கு உரிய உயிர் தற்போது இல்லை எனும் போது இதயம் அழுகிறது..

விக்னேஷ் பாலசுப்பிரமணியம்

எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே...
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்.


சோலைராஜ் க

நாம எல்லாம் எப்போ செவிடாகுறோமோ அப்போதான் எஸ்பிபி சாவார்..

தனது இந்த ஜென்மப் பயணத்தை முடித்துக்கொண்ட எஸ்பிபியை வாழ்த்தி வழியனுப்புவோம்..


RIP SPB Sir

எஸ்பிபி போல இனி ஒரு பாடகர் பிறக்கப்போவதில்லை !

மதன் :)

சோகம் மட்டும் இல்ல.. சோகத்துல ஆறுதலாவும் இருக்கணும்.. அதான் எஸ்பிபி.

சரவணன் | ‏‎‎‎سارافانان

எஸ்பிபி நிரந்தரமானவர்
அவருக்கு மரணமில்லை!

நாளும் தம் வாழ்வில்
இசையாய் மலர்வார்!

Subbu

இவ்வுலகின் கடைசி ரசிகன் உள்ளவரை எஸ்பிபியின் குரல் மங்காது, மறையாது.

CSK சேட்டு

ஆடுகளத்துல அய்யயோ நெஞ்சு அலையுதடி பாட்ட இரண்டு பேரையும் பாட வெச்சிருப்பாப்டி ஜிவி பிரகாஷ் !அவார்ட் வாங்க ஸ்டேஜ் ஏறுனப்ப எஸ்பிபி முதல்ல நான் தான் பாடுனேன் என் வாய்ஸ் புடிக்கலன்னு பையன பாட வெச்சார் போலன்னு சொல்லுவாப்டி ! such a down to the earth person #RIPSPBSir

KkbashaINLPARTY

காதல் வயபட்டவர்களுக்கும்
காயம் பட்டவர்களுக்கும் தாலாட்டிய கலைமகன்
தலைசாய்த்து விட்டார்... எஸ்பிபி
ஆழ்ந்த இரங்கல்.

Syed Khaleel

ஒருவரின் மறைவுச்செய்தி மற்றோர் கண்களில் ஒரு சொட்டுக் கண்ணீராவது வரச் செய்வது தான்..

அவர் வாழ்நாளில் சேமித்த சொத்து..

எஸ்பிபி இருக்கும் வரைக்கும் தெரியாத ஈர்ப்பு இறந்ததும் கேட்கும் ஒவ்வொரு பாடலையும் இலகுவாகக் கடந்து போக முடியவில்லை.

என்னமாய் அனுபவித்துப் பாடி இருக்கான் இந்த மனுஷன்..


நான் செந்தில்

எஸ்பிபி போல ஒரு பாடகன்
இனி வர இந்தத் திரையுலகம்
எத்தனை நூற்றாண்டுகள் தவம்
செய்தாலும் கிடைக்காது.


SKP KARUNA

அமெரிக்க ஜனாதிபதி இந்தியாவுக்கு வருகிறார்! ஒபாமா என நினைவு. குடியரசுத் தலைவர் மாளிகையில் விருந்து. அதற்கு அழைக்கப்பட்ட எஸ்பிபியை நமது குடியரசுத் தலைவர் அமெரிக்க ஜனாதிபதிக்கு அறிமுகப்படுத்துகிறார்..
“இவர் எஸ்பிபி., எங்க நாட்டின் புகழ் வாய்ந்த பாடகர்.

B Praveen Kumar

பாடும் நிலா தன் பாட்டை நிறுத்திவிட்டது. இன்று ஐயா பாலசுப்பிரமணியத்தை வணங்குகிறேன்... அவரது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.


எமகாதகன் ★ !!!

·*மறைந்தது பாடும் நிலா*

6 தேசிய விருதுகள்...
25 நந்தி விருதுகள்..
45 ஆயிரம் பாடல்கள் பாடி சாதனை படைத்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் *காலமானார்*

Vigneshwer Karthik

இளையராஜாவின் ஹார்மோனியப் பெட்டியின் ஏழு ஸ்வரத்தில் ஒரு ஸ்வரம் ஆன பஞ்சமம் என்னும் “ப” ஆகிய “பாலு” இல்லாமல் இசை இனிதாகுமா ?

KRS | கரச

இளமை.. முருகன் என்ற தமிழ்ச் சொல்லும்!

இளமை.. முருகன் மட்டுமே அல்ல!
இளமை.. நீயும் தான் பாலு!

உன் குரல் மட்டும் இளமை அல்ல!
எத்தனை வயதானாலும்
முகமும், கண்ணும், குறும்பும்.. இளமை மாறாது!

இசையில் ஊறி ஊறியே
இளமை ஆனாயோ?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்