நெட்டிசன் நோட்ஸ்: அயோத்தி தீர்ப்பு - மத நல்லிணக்கத்தை வளர்க்கட்டும்

By செய்திப்பிரிவு

அயோத்தியில் நிலம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் இன்று (சனிக்கிழமை) உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம். முஸ்லிம்களுக்கு தனியாக 5 ஏக்கர் நிலத்தை உ.பி. அரசு வழங்க வேண்டும். சர்ச்சைக்குரிய இடத்தை மத்திய அரசு கட்டுப்பாட்டில் வைத்து, கோயில் கட்டுவதற்குத் தனியாக அறக்கட்டளை உருவாக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது.

இதனைத் தொடர்ந்து அயோத்தி தீர்ப்பு குறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தைப் பதிவிட்டு வருகிறார்கள் அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Mathanki Devi S

அயோத்தி தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

மணிமாறன்

#அயோத்தி தீர்ப்பு

தீர்ப்பு எதுவானாலும் நீயும் நானும் நண்பன்தான்.

கருவாயன்

அயோத்தியில் ராமர் கோயில்...இத்தனை வருடப் பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது. இனி இதை வைத்து யாரும் அரசியல் செய்யாமல் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், மக்களின் மோசமான வாழ்வாதாரம் பற்றி கவனம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

மெத்த வீட்டான்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம். இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் கொடுக்கவேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நாட்டின் ஒற்றுமையைக் கவனத்தில் கொண்டு தொலைநோக்குச் சிந்தனையுடன் வழங்கபட்ட ஒரு நல்ல தீர்ப்பு... மனதார வரவேற்கிறேன்.

வன்னி மரம்

#இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நாடு. மனிதர்கள் பிறக்கலாம், வாழலாம், இறக்கலாம். ஆனால் எந்த மதமும் எதுவும் ஆகாது. எனவே உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைப் பின்பற்றி அனைத்து மக்களும் அமைதியாகச் செல்ல வேண்டும். இதை வைத்து அரசியல், விவாதம், சர்ச்சைகள் செய்வது தேவையற்ற ஒன்று. வாழ்க!

Ramkishore Nithianantham

அயோத்தி தீர்ப்பு மத நல்லிணக்கத்தை வளர்க்கட்டும். அனைவரும் மதிப்போம்!

ரகுராம் விக்னேஷ்

ராமர் கோயிலை இஸ்லாமியர்களும் பாபர் மசூதியை இந்துக்களும் கட்டிக் கொடுத்தால் சிறப்பாக இருக்கும். அதுவே மத நல்லிணக்கனம் .

Thala Kishore

ராமர் கோயில் கட்டிக் கொள்ளுங்கள்.

தொழுகையும் செய்து கொள்ளுங்கள்..

Jai Shri Ram Masha Allah

ஒற்றுமையே நமது நாட்டின் பலம். ஒற்றுமையாக இருங்கள்.

vinothkumar

இந்துக்கள் ராமர் கோயில் கட்டுவதைப் போல் இஸ்லாமிய சகோதரர்கள் மசூதி கட்டுவதற்கும் இந்துக்கள் உதவ வேண்டும்.


Muneeswaran Kumar

#அயோத்தி தீர்ப்பினை எல்லோரும் மதித்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.. #ராமர் கோயில் கட்டபட வேண்டும். #பாபர் மசூதி கட்டப்பட வேண்டும் . இரு மத மக்களும் இரண்டு இடங்களுக்கும் செல்ல வேண்டும்.

சிதம்பரம் தமிழழகி

அயோத்தி தீர்ப்பு என்பது ஒற்றுமை ஓங்குக.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

15 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

38 mins ago

சினிமா

54 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்