புதுச்சுவை புத்தாண்டு: பாதாம் அல்வா

By செய்திப்பிரிவு

கிறிஸ்துமஸ்ஸைத் தொடர்ந்து புத்தாண்டு வந்துவிடும். கடந்த ஆண்டில் எதையெல்லாம் செய்ய நினைத்தோமோ அதைச் செய்துமுடித்தோமா இல்லையா என்பதைப் பற்றிய சிந்தனை ஒரு பக்கம் இருந்தாலும் இந்தப் புத்தாண்டுக்குப் புதிதாக என்ன சமைக்கலாம் என்ற சிந்தனை இன்னொரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கும்.

அந்தச் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுப்பதற்காகப் புதுப்புது உணவு வகைகளுடன் வந்திருக்கிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த ராஜபுஷ்பா. புத்தாண்டு அன்று செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்க அவர் கற்றுத்தருகிறார்.

பாதாம் அல்வா

என்னென்ன தேவை?

பாதாம் பருப்பு, சர்க்கரை – தலா அரை கிலோ
நெய் - 200 கிராம்
பால் - 1 டம்ளர்
பாதாம், பிஸ்தா - தலா 10 (துருவியது)
ஏலக்காய்த் தூள், குங்குமப்பூ - சிறிதளவு

எப்படிச் செய்வது?

பாதாம், பிஸ்தா துருவலையும் ஏலக்காயையும் நெய்யில் வறுத்துக்கொள்ளுங்கள். பாதாம் பருப்பை வெந்நீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்துத் தோலை நீக்கித் தேவையான அளவு பால் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளுங்கள். அடி கனமான வாணலியில் சிறிதளவு நெய் விட்டு, அரைத்த பாதாமை அதில் சேர்த்துக் கிளறுங்கள்.

பிறகு சர்க்கரையைச் சேர்த்துக் கிளறுங்கள். சர்க்கரை கரைந்து கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது மீதமுள்ள நெய்யைச் சேர்த்துக் கிளறுங்கள். வறுத்து வைத்துள்ள பாதாம், பிஸ்தா, ஏலக்காயைச் சேர்த்து இறக்கி வைத்து, மேலே குங்குமப்பூவைத் தூவிப் பரிமாறுங்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்