‘தி இந்து’ தமிழ்: ஆஹா.. ஆண்களின் சமையல்! - ஓவியா

By செய்திப்பிரிவு

‘தி இந்து’ தமிழ் நாளிதழ் இன்று ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வாசகர்களின் ஊக்கத்தாலும், பங்களிப்பாலும் மாற்றங்களுக்குத் தயாராகி வருகிறது. இந்த சூழலில் வாசகர்கள் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் தி இந்து தமிழ் நாளிதழ் குறித்து தமிழகத்தின் மிக முக்கியமான முன்னோடிகள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

ஓவியா, பெரியாரியலாளர்.

‘தி இந்து’ நாளிதழின் முக்கியப் பங்களிப்பு என்பது சிறுபத்திரிகை தளத்தில் விவாதிக்கப்பட்டு வந்த பல்வேறு சிந்தனைப் போக்குகளைப் பொதுமக்களிடம் எடுத்துச் சென்றிருப்பதுதான். தமிழகத் தில் உள்ள அனைத்து ஆளுமைகளையும் விடுபாடு இல்லாமல் ஜனநாயகபூர்வமான வகையில் இணைத்துச் செல்வது முக்கிய மான விஷயம்.

நான் மிகவும் ரசிக்கும் பகுதி, சமையலைப் பற்றி ஆண்கள் எழுதும் தொடர்கள். அதிலும் குறிப்பாக, கிராமத்து அசைவ உணவுகள் சார்ந்து எழுதப்படும் பகுதிகள் மிகவும் நன்றாக இருக்கின்றன. அவற்றில் மண் சார்ந்த அரசியலும் இருப்பதை உணர முடிகிறது. பொதுத்தளத்தில் பெண்களுக்கு உள்ள எல்லாத் தடைகளையும் உடைத்து அவர்களை வெளியே கொண்டுவருகிறது ‘பெண் இன்று’ இணைப்பிதழ்.

பொதுப் பக்கங்களிலும் பெண்களுக்கான விஷயங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். எதைச் செய்தியாக்குவது என்பதில் இன்னமும்கூட கவனம் செலுத்தலாம். ஒரு எழுத்தாளர் என்ற வகையில் நான் நினைப்பதை எழுத முடிகிறது என்பதற்கும் ‘தி இந்து’வுக்கு நன்றி!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 mins ago

தமிழகம்

54 mins ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

13 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

மேலும்