குறளை நினைவுகூர்வதால் இழப்பது என்ன?- தொல்காப்பியன்

By செய்திப்பிரிவு

கட்டுரை:>நாம் சுவைக்க மறந்த நெல்லிக்கனி

'தி இந்து' ஆன்லைன் வாசகர் மா.தொல்காப்பியன் கருத்து:

# நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் ப.சிதம்பரம் அமைச்சராக இருந்திருந்தால் திருவள்ளுவரைத் துணைக்கழைத்திருப்பார். இப்போது அவர் அமைச்சராக இல்லை; திருவள்ளுவர் சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்ளட்டும்!#

இதன் பொருள் என்ன? நாட்டின் நிதி நிலை அறிக்கையில் திருக்குறள் கூறப்படுவதால் திருவள்ளுவர் ஏன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவேண்டும்?

முக்கிய தருணங்களில் திருக்குறள் நினைவுகூரப்படுவதால் நாம் எதை இழந்து விடுகிறோம்?

ஒரு கணிணி தொழில்நுட்ப வல்லுனர் கணினி தொடர்பான ஒரு விளக்கத்தை முன் வைக்கும்போது, அது சம்பந்தமாக அவர் ஏற்கெனவே படித்து அவரது சிந்தனையை தூண்டிய சூத்திரம் ஒன்றை முன் மொழிந்தால் அது பழமை வாதமாகிவிடுமா?

அந்தச் சூத்திரத்தை உருவாக்கிய விஞ்ஞானியை புகழ்ந்தால் அது பழம்பெருமை பேசுதல் ஆகிவிடுமா?

பழம்பெருமைகள் நமது எதிர்கால வழிகாட்டலுக்கு உதவும் என்றால், அதை பேச நாம் ஏன் தயங்க வேண்டும்? பழம்பெருமைகள் ஏதும் இல்லாத கூட்டத்தாரின் பொறாமையில் வெந்து தணிக்கிறார்களா நமது அறிவு ஜீவிகள்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கார்ட்டூன்

1 hour ago

இந்தியா

34 mins ago

வர்த்தக உலகம்

38 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

உலகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்