கருப்பு பண வேட்டையில் இதுவரை..

By செய்திப்பிரிவு

2009, மார்ச்: வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப் பட்டுள்ள ரூ. 70 ஆயிரம் கோடி கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசுக்கு உத்தரவிடு மாறு உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி பொது நல வழக்கு தொடர்ந்தார்.

2011, ஜூலை: கருப்பு பணத்தை மீட்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைப்பது தொடர்பான உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.

2014, மார்ச்: சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைப்பது தொடர்பான உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

லீச்டென்ஸ்டெய்னில் உள்ள எல்ஜிடி வங்கியில் கருப்பு பணம் வைத்திருந்த இந்தியர்கள் தொடர்பாக ஜெர்மனி அரசு அளித்த ரகசிய பட்டியலை வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

2014, ஏப்ரல்: எல்ஜிடி வங்கியில் கணக்கு வைத்திருந்த 26 பேர் பட்டியலை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அளித்தது. இதில், 18 பேர் மீது மட்டுமே வழக்கு தொடர முடியும் என்றும், மீதமுள்ள 8 பேர் சட்டப்படி வங்கிக் கணக்குகளை வைத்துள்ளவர்கள் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

சிறப்புப் புலனாய்வுக் குழு அமைப்பது தொடர் பான உத்தரவை மறுபரிசீலனை செய்யும்படி கோரி மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது. இதைக் கண்டித்த உச்ச நீதிமன்றம், தனது உத்தரவை செயல்படுத்தாததன் மூலம் நீதிமன்ற அவமதிப்பில் மத்திய அரசு ஈடுபடுவதாக விமர்சித்தது.

2014, மே: மத்தியில் பாஜக கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த 3 நாட்களில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கருப்பு பணத்தை மீட்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.

2014, அக்டோபர்: கருப்பு பணம் வைத்துள்ள வர்கள் தொடர்பாக தன்னிடம் உள்ள பட்டியலை வெளியிட தயார் என்று உச்ச நீதிமன்றத் தில் மத்திய அரசு தெரிவித்தது. அதே சமயம், ரகசியம் காக்கப்பட வேண்டும் என்ற ஒப்பந்தத்தின்படி பகிரங்கமாக வெளி யிட முடியாது என்று பாஜக அரசு தெரிவித்தது. முந்தைய காங்கிரஸ் அரசும் இதே நிலைப்பாட்டை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருப்பு பணம் மீட்பு தொடர்பாக 2011-ம் ஆண்டு, ஜூலையில் பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டும் என்று பாஜக கூட்டணி அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. ரகசியம் காக்கப்படும் என்ற உத்தர வாதத்தை தராவிட்டால், கருப்பு பணம் வைத்திருப்போரின் பட்டியலை அளிப்பது தொடர்பான ஒப்பந்தத்தை ஏற்படுத்த வெளிநாடுகள் முன்வராது என்று மத்திய அரசு கருத்துத் தெரிவித்தது.

2014, அக்டோபர் 27: கருப்பு பணம் வைத்திருப் போர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 3 பேரின் பெயர்களை மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

2014, அக்டோபர் 28: முழுமையான பெயர் பட்டியலை சீலிடப்பட்டுள்ள கவரில் வைத்து அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

2014, அக்டோபர் 29: கருப்பு பணம் வைத்திருப் பது தொடர்பாக 627 பேர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

இந்தியா

21 mins ago

விளையாட்டு

13 mins ago

இந்தியா

21 mins ago

தமிழகம்

46 mins ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்