தெலங்கானா முதல்வரின் வாழ்க்கை திரைப்படமாகிறது: ராம்கோபால் வர்மா இயக்குகிறார்

By என்.மகேஷ் குமார்

நடிகையர் திலகம் சாவித்திரி, என்.டி.ராமா ராவ், ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி, நரேந்திர மோடி ஆகியோரின் வாழ்க்கை பற்றிய திரைப்படங்கள் சமீபத்தில் தயாரிக்கப்பட்டன.

அந்த வகையில், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் வாழ்க்கையை திரைப்படமாக தயாரிக்க பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா திட்டமிட்டுள்ளார்.

இதற்கான முதல் போஸ்டரை அவர் தனது சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்டார். அதில் கேசிஆர் என்ற ஆங்கில எழுத்துகளுக்கிடையே ‘டைகர்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த தலைப்புக்குக் கீழே ‘ஆக்ரோஷமான காந்தி’ என துணை தலைப்பு எழுதப்பட்டுள்ளது. இப்போது இயக்குநர் ராம்கோபால் வர்மா, ’கோப்ரா’ என்ற ஒரு திரைப்படத்தில் உளவாளி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இப்படம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 mins ago

சினிமா

10 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

தமிழகம்

8 mins ago

சினிமா

26 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

20 mins ago

சினிமா

31 mins ago

சினிமா

34 mins ago

வலைஞர் பக்கம்

38 mins ago

சினிமா

43 mins ago

சினிமா

48 mins ago

மேலும்