இப்படிக்கு இவர்கள்: வங்கி முறைகேடுகளுக்குக் காரணம் யார்?

By செய்திப்பிரிவு

வங்கி முறைகேடுகளுக்குக் காரணம் யார்?

த்திய அரசின் பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன், "அனைத்து பொதுத் துறை வங்கிகளிலும் தனியார் பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம் பெரிய அளவில் நடைபெறும் முறைகேடுகளையும் ஊழலையும் குறைக்க இயலும்" என்று வலியுறுத்துகிறார். ஆனால், அவருடைய கருத்து ஏற்புடையதா? பொதுத் துறை வங்கிகளில் மத்திய அரசின் பங்கு அதிகப்படியாக இருப்பதே அங்கங்கே பெருமளவில் நடக்கின்ற முறைகேடுகளுக்கும் ஊழல்களுக்கும் காரணம் என்ற உண்மை தற்போது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. வாராக் கடன்களை வசூலிப்பதில் தனியார் வங்கிகள் காட்டும் அக்கறை நடவடிக்கை முறைகளை, பொதுத் துறை வங்கிகள் எடுக்க முடியாமல் தடுப்பவர்கள் யார்? விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்றவர்களைத் தப்பவிட்டு ஊழலுக்கு எதிராக முழக்கமிடுவதை எப்படி எடுத்துக்கொள்வது?

- கு.மா.பா.திருநாவுக்கரசு, மயிலை.

ஏன் இந்த அச்சம்?

கா

விரி நீர்ப்பகிர்வு விஷயத்தில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு தொடர்பாக ரவிக்குமார், வெ. ஜீவகுமார், தங்க.ஜெயராமன் எழுதிய கட்டுரைகள் (பிப். 18) தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விரிவாக விளக்கியுள்ளன. இவ்வளவு பாதகங்கள் வெளிப்படையாகத் தெரிந்திருந்தும் ஆளும் அதிமுகவினர் மௌனம் காக்கின்றனர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை விமர்சனம் செய்ய முடியாது என்று தமிழக முதல்வர் கூறுகிறார். ஆனால், கர்நாடக முதல்வரோ உச்ச நீதிமன்றத்தின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்குப் பகிரங்கமாகவே எதிர்ப்பு தெரிவிக்கிறார். தமிழக அரசு எதற்காக இப்படி மத்திய அரசைக் கண்டு பயந்து நடுங்கி, தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுக்க வேண்டும்?

- எம்.ஆர். சண்முகம், கோபிசெட்டிபாளையம்.

மழைநீர் சேகரிப்பு அவசியம்

பெ

ங்களூரு நகரத்தின் குடிநீர்த் தேவைக்காக தமிழ்நாட்டின் பங்கிலிருந்து எடுத்து வழங்கிய உச்ச நீதிமன்றம், நிலத்தடி நீர் பெரும்பாலும் குடிநீர்த் தேவைக்கே பயன்படும் என்பதை மறந்து அந்த நீரை விவசாயத்துக்குப் பயன்படுத்திக்கொள்ளுமாறு தமிழகத்துக்கு அறிவுறுத்துகிறது. நிலத்தடி நீரை ஊற்றெடுக்க வைப்பது ஆறுகளில் பாயும் நீரும் மழையும்தான். தமிழகத்தில் பெய்யும் மழையும் குறைவு, காவிரியில் வரும் தண்ணீரும் குறைவு எனும்போது நிலத்தடி நீர் எவ்வாறு ஊறும்?

இந்தத் தீர்ப்பின் பாதகமான அம்சங்களை மறந்து மனதைத் தேற்றிக்கொண்டு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பதே விவேகம். அதன்படி மழைநீர் சேகரிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும். வெள்ள நீர் வீணாவதைத் தடுக்க தடுப்பணைகளைக் கட்ட வேண்டும். ஆறு, வாய்க்கால்களில் நீரை உறிஞ்சும் தாவரங்களை அகற்றி முழுமையாகத் தூர்வார வேண்டும். அதிகமான நிலத்தடி நீரை உறிஞ்சினால் தமிழகம் பாலையாகும் என்பதால் அதற்கும் ஒரு எல்லை வகுக்க வேண்டும்.

- ஜி.அழகிரிசாமி, செம்பனார்கோயில்.

அரசியலமைப்பு நெறிகள்

நீ

திபதி சந்துரு எழுதிய கட்டுரை, மதச்சார்பின்மையை வலியுறுத்த வேண்டிய நீதித் துறையின் மதச்சார்பற்ற போக்கைக் காட்டுகிறது. நீதித் துறை வளாகங்களில் நிதிப் பிள்ளையார், காவல் துறை வளாகங்களில் காவல் விநாயகர், அரசு அலுவலகங்களில் கடவுள் படங்கள், ஆயுத பூஜை இவையனைத்தும் சிறுபான்மையினரை நம்பிக்கையிழக்க வைக்கக்கூடும்.

-கு.கீர்த்தனா, மின்னஞ்சல் மூலம்...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்