கற்றதும் பெற்றதும் 2022 - கலைகள் | பேசப்பட்ட ‘நட்சத்திரங்கள்’... கவனம் பெறாத ‘விட்னஸ்’

By ச.கோபாலகிருஷ்ணன்

இந்தாண்டில் (2022) அஜித் குமாரின் ‘வலிமை’, விஜய்யின் ‘பீஸ்ட்’, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’, விக்ரமின் ‘கோப்ரா’, தனுஷ்-செல்வராகவன் இணையின் ‘நானே வருவேன்’, விஜய் சேதுபதியின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘டி.எஸ்.பி’, சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ என முன்னணி நட்சத்திரங்களின் பல படங்கள் ரசிகர்களை ஏமாற்றின. ஆனால், இவற்றில் சில படங்களுக்கு வெற்றிவிழா கொண்டாடப்பட்டது. ‘பீஸ்ட்’, ‘வலிமை’ படங்கள் அதிக வசூலைக் குவித்ததாக விஜய், அஜித் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பெருமைப்பட்டுக்கொண்டனர். தமிழ் சினிமா வியாபார விவரங்கள் தொடர்பான வெளிப்படைத்தன்மை இல்லாததால் இந்தக் கூற்றுகளின் உண்மையை உறுதிப்படுத்திக்கொள்ள முடியவில்லை. ஆனால், மக்கள் மனங்களில் இந்தப் படங்கள் தோல்வியடைந்ததாகவே கருத வேண்டும்.

அதே நேரம் முதல்நிலை நட்சத்திரங்களின் அனைத்துப் படங்களும் சோடைபோய்விடவில்லை. தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’, சிவகார்த்திகேயனின் ‘டான்’ ஆகியவை வெற்றியடைந்தன. ‘திருச்சிற்றம்பலம்’ மெல்லுணர்வுப் படங்களின் மீதான நம்பிக்கையை மீட்டெடுத்தது. மிகப் பெரிய வசூலைக் குவித்த ‘விக்ரம்’ படத்தில் லோகேஷ் கனகராஜ் என்னும் இளம் இயக்குநருடன் இணைந்த கமல் ஹாசன் அவருக்கு முழுச் சுதந்திரம் அளித்திருந்தார். பகத் பாசில், விஜய் சேதுபதி எனப் பிற நட்சத்திரங்களுக்கும் இணையான முக்கியத்துவம் அளிக்கப்பட்டு அசலான மல்டி-ஸ்டாரர் அனுபவத்தைக் கொடுத்ததும் இதன் வெற்றிக்குக் காரணம். அதே நேரம், இந்தப் படம் அளவுகடந்த வன்முறையை முன்னிறுத்தியது என்னும் விமர்சனத்தையும் புறந்தள்ளிவிட முடியாது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

4 mins ago

தமிழகம்

1 hour ago

கார்ட்டூன்

2 hours ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

உலகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

சினிமா

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்